அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.
பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டி வராது எனக் கூறுவது உண்டு.
ஏனெனின் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆனால் இந்த விசயத்தில் Strawberry பழம் ஆப்பிளை மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் சாலக் இன்ஸ் டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம் (CFL)எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.
ஒரு பிரிவு எலிகளுக்கு Strawberry பழம் வழக்கப்பட்டது
மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.
இதில் Strawberry பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளை விட அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
Strawberry பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்
இந்தப் பொருள் வேறு சில பழங்கள் , காய்கறிகள் , டீ மற்றும் ரெட் வைன் ஆகியவற்றில் உள்ளது.
இது சக்கரை நோய் , புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது
இது தவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.
தாவரங்களின் இழைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்கவும் பிளவனைடு உதவுகிறது.
இவ்வாறு CFL விஞ்ஞானியும் , இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஸ்டாபெர்ரி சாப்பிடுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துகொள்ளுங்கள்
நன்றி மித்திரன் வாரமலர் April 01- 2012
0 கருத்துகள்:
கருத்துரையிடுக