அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Almowilath Islamiclibrary இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும்.(அல்குர்ஆன். 3:185,21:35,21:57)
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாகட்டும், நல்லடியா ராகட்டும், மஹாhனாகட்டும், அவ்லியாவாகட்டும் யாராக இருப்பினும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும் என்பது இறை நியதியாகும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
ஆனால், இன்று மார்க்க மேதாவிகளில் சிலர் மண்ணறையில் அடக்கமாயிருக்கும் அல்லியாக்கள் மரணிக்கவில்லை.அவர்கள் உயிரோடு தானிருக்கிறார்கள் என வாதிடுகின்றனர்.
பாமர மக்களை நம்ப வைத்து, அவர்கள் கட்டிவைத்திருக்கும் கப்றுகள்,
தர்ஹாக்களுக்கு மேல்
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (குர்ஆன்:10:62)
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். (குர்ஆன்: 2:154)
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்.( குர்ஆன் 3:169)
என்ற திருக்குர்ஆனின் மூன்று வசனங்களை எழுதிவைத்திருப்பதைப் பார்க்கலாம்.
10:62 என்னும் முதல் வசனத்தில் அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் சிறப்பிக்கப்பட்ட உண்மையான இறைநேசர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அவ்லியாவென கற்பனை செய்துகொண்டவர்களுக்கெல்லாம் இந்த மறைவசனத்தை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்த வசனங்களை மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளதைப் பார்ப்போம்.
நல்லடியார்களும், மஹான்களும் இறந்த பின்னரும் உயிரோடு உள்ளனர்.எனவே, அவர்களை வழிபடலாம், அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
1. இவ்வசனங்கள் நல்லடியார்கள்,மற்றும் மஹான்களைக் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதை ஊக்குவிக்கவே அருளப்பட்டன.
2. இந்த வசனங்கள் அருளப்பட்டபின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
3. இவ்வசனங்களை கூர்;ந்து கவனித்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.
2;:154 என்ற வசனத்தில் அவர்கள் உயிரோடு உள்ளனர் என்பதைத் தொடர்ந்து
وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
‘எனினும் நீங்கள் உணரமாட்டீர்கள்’
என்றும் கூறப்பட்டுள்ளது.இப்போது 2:154 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.
وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
அல்லாஹ்வுடை ய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (குர்ஆன்: 2:154)
இதில் வரும்; ‘நீங்கள் உணரமாட்டீர்கள்’ என்ற இறுதிப்புகுதியை எழுதுவதில்லை.
அவர்கள் ‘உயிரோடு இருப்பது’ நாம் புரிந்து வைத்திருக்கும் பொருளில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தருகிறது.
3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் 170,171,172,173 ஆகிய நான்கு வசனங்களும் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து,
عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
3:169-வது வசனதில் ‘ தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர் ‘ என்பதை விட்டுவிட்டு என்ற பகுதியை எழுதுகின்றனர்.
இப்போது 3:169 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவாகளை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். (அவர்கள்) தமது இறைவனிடத்தில் உயிரோடு இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)
3:169-வது வசனம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட ஷஷஹீதுகள் என்னும் வீரத்தியாகிகளைக் குறித்து சொல்லப்படும் வசனம் என்பதையும் அறியாது அறைகுறையாகப் புரிந்து இந்த வசனத்தை எழுதி மக்களை திசை திருப்புகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மரணித்துவிட்டாலும், இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனத் தெரிவிக்கிறது.
இவையனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் தான் மிகவும் முக்கியமானது.
உயிருடன் இருக்கிறர்கள் என்றால் எப்படி? என நாங்கள் கேட்டபோது ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 3500)
நிச்சயமாக சுஹதாக்(கள் என்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர);களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)
அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த ஷஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் நல்லடியார்களான அவர்களை மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு, எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிரோடு இருக்கிறார்கள்; என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலையைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸிகளின் வாயிலாக நல்லடியார்கள் ‘சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கெண்டிருக்கிறார்கள’; என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.
2:154,3:169) ஆகிய இருவசனங்களிலும் ஷஷஹீதுகளைக் குறித்து மட்டுமே குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.
இவர்கள் யாராக இருந்தாலும் இறப்பைத் தழுவித்தான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள் வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்பதை நமது சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
விபரீதமான பொருள்.
நபிமார்களோ, அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் உணமையிலே மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள்.
1. அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால்; உயிருடன் இருந்த ஒருவரை மக்கள் பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை செய்ததாக ஆகிவிடும்.
2. அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும்.
ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே உறுதி செய்து அவர்களை கழுவி குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழ வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
jazakallahu kahir :April 26th, 2011 by Dr. Ahmad Baqavi Ph.D
நன்றி Almowilath Islamiclibrary Post
1 கருத்துகள்:
innum neenga valaranum thambi
shareef
கருத்துரையிடுக