அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....
சென்ற சமையல் பகுதியில் காய்கறித் தண்ணீர் ரசம் தயாரிப்பது பற்றி எழுதி இருந்தேன்.இன்றைய ஸ்பெஷல் ஆக உங்களுக்கு அதிரடி ரசம் என்ற தலைப்பில் ஒரு அருமையான சமையல் குறிப்பு ஒன்றை பதிகின்றேன்.
அதிரடி ரசம் தயாரிக்க தேவையான பொருள்கள்
தக்காளி - 03தண்ணீர் - 02 டம்ளர்
மிளகு - 1/2 Tea Spoon சீரகம் - 1/2 Tea Spoon பூண்டு - 04கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
தக்காளியை மிக்ஸியில் அடித்து வைத்துக்
கொள்ளவும்.
மிளகு சீரகம் பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை விட்டு கடுகு , கறிவேப்பிலையை தாளித்து தக்காளி ஜூஸை விட்டு உப்பு , இடித்தமிளகு சீராக Past டை சேர்க்கவும்.
பொங்கி வரும் போது இறக்கவும்.
சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக