Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

சிலந்தியும் - சிலந்தி வலையும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக முகவை சேக் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


சிலந்தி வலை என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தௌர் குஹை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் அல்லாஹ்.

அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (29:41)





தௌர் குகை - சிலந்தி 

ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அரசியல் தலைவர் பேசுகிறார். அங்கே திடீரென்று கூச்சல், குழப்பம், வெட்டு, குத்து. இதை தொடர்ந்து அந்த கூட்டத்திலிருந்து முதல் ஆளாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுவது அந்த தலைவர் தான். இது தான் இன்றைய தலைவர்களின் முன்மாதிரி.

ஆனால் மக்காவில் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அகிலத்தின் தலைவரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னாரை பின்பற்றியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது பெருமானார் அவர்கள் மக்காவிலேயே இருந்து கொண்டு பின்பற்றியவர்களை அபிசினியாவிற்கும், யத்ரிபுக்கும் (பெருமானார் காலடி எடுத்து வைக்கும் வரை மதினாவின் (மதினத்துந் நபி - நபியின் பட்டணம்) முந்தைய பெயர் தான் யத்ரிப்) அனுப்பி வைத்தார்கள்.

இந்த சமயத்தில் தான் மக்கத்து குறைஷிகள் ஊர்மன்றமாகிய தாருன்னத்வாவில் அமர்ந்து பெருமானாரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். வீட்டுக்கு ஒருவர் என வேங்கை போல் புறப்பட்டு கொலை வெறியோடு ஆயுதமேந்தி புறப்பட்டனர்.

அதே நேரத்தில் பெருமானார் அவர்கள் அவர்களது தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினா செல்லும் வழியில் மக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தௌர் எனும் குகைக்கு வந்து சேர்கிறார்கள்.

மூன்று நாட்கள் அந்த தௌர் குகையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இதற்கிடையில் கொலை வெறியோடு புறப்பட்டவர்கள் ஆளுக்கொரு திசையாக முஹம்மது நபியவர்களை காணாது தேடி அலைந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் பெருமானாரும் தோழரும் மறைந்திருந்த தௌர் குகையை நெருங்கினர். அந்த சிலர் அங்கே எதிர்பட்ட ஒரு இடையனை பார்த்து, 'இந்த குகையில் யாரேனும் ஒளிந்திருப்பதை பார்த்தாயா?" என்று கேட்டனர்

அதற்கு அந்த இடையன், "நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை, நீங்களே நுழைந்து பாருங்கள்! யாரேனும் அங்கே இருந்தாலும் இருக்கலாம்" என்று கூறினான்

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பது பெருமானார் அவர்களுக்கும் தோழர்அவர்களுக்கும் தெளிவாக கேட்டது.

ஈரக் குலையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தோழர் அவர்கள், ".. குனிந்து தன் கால் பெரு விரலை பார்த்தால் கூட நாம் உள்ளே இருப்பது தெரிந்து விடுமே.. நிறைய பேர் வந்திருப்பது போல் தெரிகிறதே . நாம் இருவர் தாமே இருக்கிறோம்" என்று ஏக்கத்திலும் பயத்திலும் கூறினார்கள்

இத்தகைய பயம் நியாயமானது தான், அந்த நேரம் சாமானிய நேரமில்லை. கையில் வாளுடன் தலையை சீவுவதற்கு காத்திருக்கும் கொலை வெறி கூட்டம் வெளியே. இரண்டே இரண்டு பேர் மட்டும் அதுவும் நிராயுதபாணியாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி ஒளிந்து கொண்டு உள்ளே. என்ன செய்வது? வயிற்றுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

பெருமானார் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்படி பதில் மொழி பகர்ந்தார்கள், "இல்லை, இல்லை, நாம் மூவர் இங்கு இருக்கின்றோம், அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்.."

யா அல்லாஹ்.! என்ன உறுதி! என்ன நம்பிக்கை! என்ன தெளிவு!

இனி இந்த பிரச்சினை பெருமானாரின் சம்மந்தப்பட்டது அல்ல, இறைவனின் சம்மந்தப்பட்டது.

இறைவன் தன் தூதரை, தன் மீது முழுமையாக பொறுப்பை ஒப்படைத்தவரை எப்படி காப்பாற்ற போகிறான்? எந்த படையை அனுப்ப போகிறான்? என்பதே படிக்கும் அனைவரும் எதிர்நோக்கும் அடுத்த விநா.

அவன் யானைப் படையையோ அல்லது குதிரைப் படையையோ அனுப்பவில்லை. அவன் அனுப்பியது ஒரே ஒரு சிலந்தி பூச்சி. ஆம், அவன் அனுப்பிய அந்த சிலந்திப் பூச்சி திடீரென்று நுழைவாயிலில் ஒரு வலை பின்னியது. அல்லது இறைவன் அவ்வாறு பின்ன சொல்லி அதற்கு செய்தியை அனுப்பினான். பின்னிய அந்த வலை நுழைவாயிலையே மூடியிருந்தது.

அந்த இடையன் சொன்னதை கேட்டு குகையின் உள்ளே சென்று பார்க்கலாம் என்று குனிந்த ஒருவன், "வீணாக உள்ளே போய் ஏன் பார்க்க வேண்டும்?, இந்த வலையை பார்த்தாலே முஹம்மது பிறப்பதற்கு முன்னாலேயே பின்னப்பட்ட வலை

மாதிரியல்லவா இருக்கிறது.." என்று கூறி விட்டு "வாருங்கள் போகலாம்.." என்று கூறி விட்டு ஊர் திரும்புகிற வழியை பார்த்தான்.

பெருமானார் அவர்கள், "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று நன்றி பெருக்குடன் கூறினார்கள்.

குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்தி வீடு

குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ''சிலந்திப்பூச்சி'' என்று பொருள்.
இறைவன் குர்ஆனில் இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73 , 29:41 வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُமனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (27:73) 

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاء كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ

''அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (29:41)

இந்த வசனங்களைக் கேட்ட குரைஷிகள் ''முஹம்மதின் இறைவன் ஈயையும், சிலந்திப்பூச்சியையும் மேற்கோள் காட்ட நாணவில்லை'' என்று இழித்துரைத்தபோது
இறைவன் பின்வரும் வசனத்தை அருளினான்.

وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ

‘இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள் (29:43)

 என்று எடுத்துரைத்தான்.

இந்த சிலந்தியின் அறிவியல் உவமை சிந்திக்க வைக்கும் ஓர் அற்புதமான உவமையாகும்.

சிலந்தி வலையில் பொறியியல் கலை 

சிலந்திகள்,தமது வலைகளை பின்னுவதற்குரிய நூலை தாங்களே உருவாக்குகின்றன. அவை பின்னுவதற்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பமும், இன்றைய கட்டிடக்கலை பொறியிளளர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் ஒன்று தான் என்பதை நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலந்தி தனது வலையைப் பின்னுவதற்கு இரண்டு எதிரெதிர் முனைகள் தேவைப்படு கின்றன. பொதுவாக இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலோ, இரண்டு மரக்கிளை களுக்கு இடையிலோ, சிலந்தி தனது வலையை உருவாக்குகிறது.

இருப்பினும், சிலவகை சிலந்திகள் ஒரு தனிப்பட்ட மரக்கிளையை மட்டுமே பயன்படுத்தி தங்களின் வலைகளை பின்னும் திறன் படைத்தவை. இவை இத்தனை நேர்த்தியான வலைகளை உருவாக்குகின்றன என்பது வரைபடங்களை வைத்து உருவாக்கும் பொறியாளர்களைக் கூட வியப்படையச் செய்கின்றன.

தி முதலில் சிலந் எளிதில் வளையக்கூடிய ஒரு மரக்கிளையைத் தேர்ந்தெடுத்து மரக்கிளையின் முனையில் தனது உடலிலிருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை கெட்டியாகக் கட்டுகிறது. தொடர்ந்து மரக்கிளையின் அடிப்பகுதி நோக்கி ஊர்ந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் தனது உடலிலிருந்து உற்பத்தியாகும் நூலை நிறுத்துகிறது. மரக்கிளையில் கட்டியிருக்கும் நூலை, மரக்கிளை வளையும் வரை இழுத்து அரை வட்டவடிவத்திற்கு கொண்டு வருகிறது.

நூலின் மறு முனையை வளைய வடிவத்திற்குக் கட்டுகிறது. உருவாக்கப்பட்ட இந்த வளையத் திற்குள் சிலந்தி தனது வலையை பின்ன ஆரம்கிக்கிறது. இரண்டு மீட்டர் நீளமுள்ள நூலை இரண்டு மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு சுவர்களுக்கு மத்தியில் கட்ட வேண்டும் எனில் அது எவ்வாறு மிகநேர்த்தியாக கட்டிமுடிக்கமுடியும் என்பதை கட்டிடக் கலைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.

சிலந்தியின் தொழில் நுட்பம்

சில வேளைகளில் அதிக இடைவெளிகளில் பின்னும் வலை வலுவில்லாது போய்விடும். அப்போது தாம் உணவாக உட்கொள்ளும் பூச்சிகளைப் பிடிப்பதற்காக வலை வலுவான தாக இருப்பதற்கு அது ஒரு அதிசயமான முடிவுக்கு வருகிறது.உடனே தனது உடலிலி ருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை பின்னப்பட்ட வலையின் மத்தியில் கட்டுகிறது. மற்றொரு முனையை தரையில் உள்ள ஒரு சிறிய கல்லில் கட்டிவைக்கிறது.

மீண்டும் வலைக்கு வரும் சிலந்தி, வலையின் மத்தியில் கட்டியிருக்கும் நூலை இழுத்து தரையில் உள்ள கல்லை மேல் நோக்கி உயர்துத்துகிறது. மேல் நோக்கி உயர்த்தப்பட்ட கல் வலையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் நூலை உயர்த்தி,வலையின் மற்றொரு பகுதியில் இழுக்கப்பட்ட நூலை கட்டிவைக்கிறது. தொங்கிக் கொண்டிருக்கும் கல்லின் கனத்தால் ,சிலந்தி வலை கீழ் நோக்கி இழுபடுவதோடு வலையின் வலிமையும்,இறுகும் தன்மையும், தேவையான அளவு அதிகரிக்கிறது.

சிலந்தியின் இந்தப்பிரச்சனைக்கு ஒரு பொறியாளர் கூட இதனைச் சிந்தித்திருக்கமாட்டார்.
சில வகை சிலந்திகள் தங்களின் வலைகளில் அறியாமல் பிறபூச்சியினங்கள் நுழைந்துவிட்டால் அவற்றை தனியாக ஒரு பகுதியில், எங்கும் நகரவிடாமல் சிறைப்படுத்தி விடுகின்றன. இந்த நுண்ணறிவு அவற்றிற்கு எப்படிக் கிடைத்தன?
கட்டடக்கலை அறிவு இல்லாத இந்தச் சிலந்திகள் எவ்வாறு இந்த அறிவைப் பெற்றன? ஐந்தறிவு படைத்த இந்த சிலந்திகள் எப்படி இந்த தொழில் நுட்பத்தைப் கற்றன ? இவ்வுலகில் வாழும் சிலந்திகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தொழில் நுட்பத்தைப் பயன்னடுத்துகின்றனவே ? இது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அற்புத ஆற்றலல்லவா?

ஆம்! அல்லாஹ் கூறுவது போல சிந்திக்கும் மக்களுக்கு இதில் சிறந்த படிப்பினைகள் உள்ளன.

நன்றி முகவை சேக் இன் Post


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets