அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
கேள்வி : ஹிப்னாடிசம் என்றால் என்ன?, அது ஒரு விதமான கலையா? , அல்லது அனைவராலும் ஏலுமான காரியமா? , அடுத்தவருடைய சிந்தனையை கட்டுப் படுத்த முடியும் என்று சொல்வது சரியா?
பதில் : ஹிப்னாடிசம் (Hypnotism) என்ற சொல்லுக்கு தமிழில் நோக்கு வர்மம் என்று பெயர் இட்டு உள்ளனர்.
ஹிப்னாடிசம்(Hypnotism) மூலம் நொடிப்பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலயே எதிரியை வீழ்த்தவோ,
அல்லது தனது முன்னாள் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல
இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞனமும் நிரூபிக்க வில்லை கியாமத் நாள் வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்க்கு சவாலாகவே நாம் சொல்லிக்கொள்ளலாம்.
ஹிப்னாடிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம்
அதற்க்கு அவர்கள் சொன்ன பதில் நம்பியவர்களுக்குதான் இது பலிக்கும் ; நம்பாதவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது என்பதுதான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது எல்லா பிராடு பேர்வழிகள்(?) இதயே தான் சொல்லி தப்பித்துக்கொள்கிறார்கள்.
ஹிப்னாடிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த பொழுது அதில் எந்த விஞ்ஞன உண்மையோ ஏற்கத்தக்க எந்த லாஜிகோ இல்லை என்று தெளிவாக தெரிந்தது.
ஹிப்னாடிசம் செய்வதாக சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மன நோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தான் நாம் வர முடிகின்றது எந்த ஒரு ஹிப்னாடிச நிபுணர் (?)
முன்வந்தாலும் அவர் முன்னிலையில் அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கின்றோம்.
மார்க்க அடிப்படையில் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாகும்.
எவ்வித புற சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்கு உரிய ஆற்றலாகும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புற சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது.
"ஒரு சாதனத்தை பயன் படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்" என்பதை நாம் நம்பலாம் கண்கூடாக இது தெரிவதால் இதற்க்கு மார்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேடியதில்லை.
ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்கத்தில் அதற்க்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வைப்போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம்.
எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணைவைத்தலாகும் அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.
அல்லாஹ் ஒரு மனிதனை உணமாகவோ, கைகாலை முடக்கவோ , படுத்த படுக்கயி கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல் , எப்படி இது நடந்தது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான்.
இதுபோல் மனிதர்களும் செய்வார்கள் என்று நம்புவது அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக்கு முரணானதாகும்
ஹிப்னாடிசம் என்பதைப்பற்றியும் இப்படித்தான் நம்புகின்றனர்.
ஹிப்னாடிசம் செய்பவன் தன்னுடைய பார்வயினாலயே ஒருவனுடைய கைகால்களை முடக்குவானாம் , அவனை தொடாமல் அவன் மீது எந்த சாதனத்தையும் பயன்படுத்தாமல் இதை செய்து விடுவாராம்.
ஒருவனது உள்ளத்தில் உள்ள இரகசியங்களை எல்லாம் ஹிப்னாடிசம்மூலம் அறிந்து கொள்வானாம் , ஹிப்னாடிசம் மூலம் ஆட்டிப்படைப்பானாம் இப்படி நம்பும் போது இறைவனைப் போன்ற ஆற்றல் உள்ளவன் என்று ஆகிவிடும்.
நம்முடைய உள்ளங்களும் அல்லாஹ்வுடைய கையில்தான் உள்ளது
உங்களை மாற்றுகின்ற ஆற்றல் மனிதனுக்கு கிடையாது
எந்த ஒருமனிதணும் இறைவனைப் போன்று நம்முடைய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.
உள்ளங்களில் உள்ளதை அறிபவன் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட தகுதிகளில் ஒன்றாகும் ஹிப்னாடிசப் பேர்வழிகள் தங்களும் அந்த இறைத் தன்மையின் கூட்டாளிகளாக காட்டிக் கொள்கின்றனர்.
3:119, 3:154, 5:7, 8:43, 11:5, 27:74, 28:69, 29:10, 31:23, 35:38, 39:7, 40:19, 42:24, 57:6, 64:4, 67:13, ஆகிய வசனங்கள் உள்ளங்களில் உள்ளதை அறிந்து கொள்வது என்பது இறைவனுக்கு மட்டும் உள்ள தனித் தகுதி என்று கூறுகின்றன...
இவ்வளவு வசனங்களையும் மறுத்து விட்டுதான் ஹிப்னாடிசத்தை நம்ப முடியும்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தை போன்று உள்ளன அதை தான் நாடிய முறையில்
மாற்றுகிறான் " என்று கூறி விட்டு இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்கு கீழ் படிவதட்க்கு திருப்புவாயாக " என்று பிராத்தித்தார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)நூல் முஸ்லிம்
எனவே மார்கத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒன்றான ஹிப்னாடிசம் என்பதை ஒருவன் நம்பினால் அது இணைவைப்பில் சேர்ந்து விடும்
ஒரு மனிதனிடம் பக்குவமாக பேசி அவனது வாயில் இருந்து சில செய்தி கலைப் பிடுங்கலாம் என்பதைத் தவிர ஹிப்னாடிசம் பற்றி சொல்லப்படும் அனைத்தும் பொய்யானவை.
இதில் கடுகளவும் நமக்கு சந்தேகம் இல்லை
நன்றி March 2012 அன்று வெளியான sltj இன் 15 வது அழைப்பு மாத இதழ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக