அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
குற்றப்பத்திரிகை தாக்கலாகி
வாங்கவில்லை வாக்குமூலம்
சாட்சி விசாரணையின்றி
எழுதி வைத்த ஆயத்தத் தீர்ப்பு
உடனடி அமுல் மரண தண்டனை
தூக்குக் கயிற்றுக்கும் வேலையின்றி
நூதன முறையில் நொடியில் நிறைவேறும்
பிறக்குமுன்பே மரண தண்டனை
விசித்திரத் தீர்ப்புதான்!
பிறந்து வளர்ந்தபின் தீர்ப்பென்றால்
குடியரசுத் தலைவரிடம்
கருணைமனு சமர்ப்பிக்கலாம்
பிறவாத பெண் சிசுவால்
என் செய்ய எயலும்?
பெண் கருவறையே
பெண் சிசுவின் கல்லறையாவது
பெருங்கொடுமை தான்
முதலெழுத்தே முற்றுப்புள்ளி.
உயிரெழுத்துக்கு இடந்தர மறுத்து
ஆயுத எழுத்து வலிமையாய்ப் பயன்பட்டு
முற்றுப்புள்ளிகள் மூன்று வைக்கும்.
புதைக்கப்படுவோர்
விதைக்கப்படுவார்
இலட்சிய மரணத்தில்;
விதைகும் போதே
புதைக்கப் படுகிறார்
இங்கு மட்டும்.
அமுதம் வருமுன் பாற்கடலில்
ஆலகாலம் வந்தது போல்
பாலமுதம் சுரக்குமுன்
நஞ்சு கிடைக்கிறது பெண் சிசுவுக்கு.
-சி. விநாயகமூர்த்தி-
நன்றி புதிய பெண்ணியம் சமூக அறிவியல் தமிழ் பண்பாட்டு இனைய இதழ்
கவிதை தொடுப்பு
குற்றப்பத்திரிகை தாக்கலாகி
வாங்கவில்லை வாக்குமூலம்
சாட்சி விசாரணையின்றி
எழுதி வைத்த ஆயத்தத் தீர்ப்பு
உடனடி அமுல் மரண தண்டனை
தூக்குக் கயிற்றுக்கும் வேலையின்றி
நூதன முறையில் நொடியில் நிறைவேறும்
பிறக்குமுன்பே மரண தண்டனை
விசித்திரத் தீர்ப்புதான்!
பிறந்து வளர்ந்தபின் தீர்ப்பென்றால்
குடியரசுத் தலைவரிடம்
கருணைமனு சமர்ப்பிக்கலாம்
பிறவாத பெண் சிசுவால்
என் செய்ய எயலும்?
பெண் கருவறையே
பெண் சிசுவின் கல்லறையாவது
பெருங்கொடுமை தான்
முதலெழுத்தே முற்றுப்புள்ளி.
உயிரெழுத்துக்கு இடந்தர மறுத்து
ஆயுத எழுத்து வலிமையாய்ப் பயன்பட்டு
முற்றுப்புள்ளிகள் மூன்று வைக்கும்.
புதைக்கப்படுவோர்
விதைக்கப்படுவார்
இலட்சிய மரணத்தில்;
விதைகும் போதே
புதைக்கப் படுகிறார்
இங்கு மட்டும்.
அமுதம் வருமுன் பாற்கடலில்
ஆலகாலம் வந்தது போல்
பாலமுதம் சுரக்குமுன்
நஞ்சு கிடைக்கிறது பெண் சிசுவுக்கு.
-சி. விநாயகமூர்த்தி-
நன்றி புதிய பெண்ணியம் சமூக அறிவியல் தமிழ் பண்பாட்டு இனைய இதழ்
கவிதை தொடுப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக