அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இன்றைய ஸ்பெஷல் என்ன என்று தெரியுமா?
முருங்கக்காய் சூப்தான் இன்றைய ஸ்பெஷல் சமையல்
தேவையானவை
முருங்கக்காய் - 04
து.பருப்பு - 100g
வெங்காயம் - 01
தக்காளி - 02
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 01 Tea Spoon
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முருங்கக்காயை வேகவைத்து சதைப் பகுதியை மட்டும் வழித்து எடுக்கவும் , து.பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,தக்காளியை வதக்கவும்
பிறகு வேகவைத்த து.பருப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மஞ்சள் தூள் , மிளகாய்த் தூள் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிவந்தபின் வழித்து எடுத்த முருங்கக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் மிளகுத்தூள்,உப்பு சேர்த்து சாப்பிடக்கொடுக்கவும்.
சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக