அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...
நம்மில் அநேகர் தேநீர் சுவைக்கும் சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விடையம்தான்.
தேயிலை பிலக் டீ(Black Tea) , கிரீன் டீ (Green Tea) , வைட் டீ (White Tea
) , யெலே டீ(Yellow Tea) , ஊலாங் டீ என பல்வேறு வகைகலாக அவதாரம் எடுத்து உள்ளது.
இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும் தயாரிக்கப்படும் முறைகலும்,பதப்படுத்தப்படும் முறைகலும் வேருபடுகின்றன.
இவற்றின் விளைவாக பெரும்பாலான தேயிலை வகைகள் நல்ல மருத்துவ குனங்களை இழந்துவிட இவற்றுள் தன்மை மாராமல் அபபடியே நம் கைகளில் கிடைப்பது கிரீன் டீ (Green Tea) மட்டுமே.
ஜப்பானில் உள்ள டோகோஹு பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40530 நபர்களை வைத்து கிரீன் டீயை பற்றி மிகப் பெரிய ஆராய்சியை நடத்தினார்.
அது 1994ல் தொடங்கி 11ஆண்டுகளாக நீடித்தது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எண்ணற்ற பல்கலைகழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சி செய்தன.
ஆயிரத்திற்க்கும் மேட்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சிகளின் முடிவுகள் வாழ்நாட்களையே நீடிக்கக்கூடிய அளவுக்கு நல்ல மருத்துவக்குனங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.
கிரீன் டீ இன் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி அக்சிடேட்கள் தான்
இதனை நோய் எதிர்ப்பு சக்தி என தமிழில் அழைக்கின்றோம்.
பழங்கள்,காய் கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கின்றது சுருக்கமாக சொன்னால் 01 கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூசுக்கு சமம்.
சூரியனின் வெப்பம்,புற ஊதாக்கதிர்,மாசடைந்த காற்று ,சிகரெட் மற்றும் வாகன புகை ,அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் கெடுதல் தரும் வேதிப் பொருட்களை ஏற்படுத்துகின்றன இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து சீரழித்து சிறிய நோய் முதல் இதய,புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழி வகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கு தள்ளி விடுகின்றன.
கிரீன் டீயின் உயர்தர குணம் நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதிப்பித்து வாழ்நாட்களை நீடிக்கச் செய்கின்றது எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் டீ இன் நன்மைகை
* இரத்தத்தில் உள்ள கேட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது
* உயர் இரத்தத்தை கட்டுப் படுத்துகின்றது
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவை அற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகின்றது
* இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கின்றது
* இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது
* இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது
* நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகின்றது
* புற்று நோய் வராமலும்,புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கின்றது
* எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகின்றது
* பல்லில் ஏற்படும் பல் சொத்தையும் , வாய் துர்நாற்றத்தையும் நீக்குகின்றது
* ஞசாபக சக்தியை அதிகரிக்கின்றது
* சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகின்றது,பருக்கள் வராமலும் தடுக்கின்றது
* வயதான பின் வரும் ஞசாபாக மறதி மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களை தடுக்கின்றது
* மன அளுத்தத்திட்க்கும் தலை வலிக்கும் மருந்தாக செயல் படுகின்றது
* உடலில் ஏற்படும் புண்கள் ,காயங்கள் விரைந்து குணமாக உதவுகின்றது
* மூட்டு வாதத்தைக் குணமாக்க உதவுகின்றது
* புகை,மதுவின் விளைவாக உடலில் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகின்றது
* கிரீன் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும் ,நோய் எதிர்ப்பு சக்தியை தருவதிலும் நிகரற்று விளங்குகின்றது.
செந்தூரம் பத்திரிகையில் வெளியான் தகவல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக