Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் UPLOAD n SELL

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் இணையத்தளம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்

இந்ததளத்தின் பெயர்தான் UPLOAD n SELL

Farhan , farhan , farhanforyou.blogspot.com , farhan4u , selling
நீங்கள் உருவாகிய E-Book , Files , Downloads , Digital Product போன்ற அனைத்தையும் இணையதளத்தில் விற்பனை செய்ய இந்த தளம் உதவுகின்றது
கீழ் கொடுக்கப்படும் தல முகவரியை தொட்டு தளத்திட்க்குள் நுழைந்து கொள்ளுங்கள்

உங்கள் E-Book , Files , Downloads , Digital Product களை பதிவேற்றி நீங்கள் நிர்ணயம் செய்யும் விலையில் உங்கள் E-Book , Files , Downloads , Digital Product களை விற்பனை செய்ய முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கோழியும் கூவும்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..

ராஸிக் படுக்கையில் புரண்டான் - எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான்.

எழுந்து.. மம்மது கடைக்குச் சென்று ஒரு டீக்குடிக்கலாம்தான்.. ஆனால் அங்கே துக்க விசாரிப்பு ஆரம்பமாகி விடுமே! அவனில்லாமலே கூட இப்போது அவனைத் தான் போஸ்ட்மார்டம் செய்து கொண்டிருப்பார்கள்…! கடைசியாக பிடிபட்டு ஊர் திரும்பியவன் அவன் தானே?

மம்மது கடையில் காலையில் ‘பஜனை’க்கு கூடும் ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள். ஒரு காலத்தில் பர்மாவில் ஓகோவென்று வாழ்ந்த உமர்கான் காக்கா! உலகப் போருக்குப் பிறகு இங்கேயே தங்கி, பூர்விகச் சொத்தை கரைத்தே வாழ்க்கையை ஓட்டியவர். பிடிப்பது பீடி என்றாலும் பென்சன் சிகரெட் என்று பீற்றுபவர் – இப்போது குடிக்கும் டீக்கு மம்மதிடம் எழுதிவைக்கச் சொல்லும் நிலையில்! “காலையில், சாவுக்கிராக்கி” என்று மம்மதின் மனசால் திட்டு வாங்குபவர்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று....

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....

                                          தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண்: 2
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


பதில்:

Dr.Zakir Naik , Farhan , Islamic News , farhanforyou
இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

01. அருள்மறை குர்ஆனின் வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.

'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

முருங்கக்காய் சூப்






அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. 


இன்றைய ஸ்பெஷல் என்ன என்று தெரியுமா?
முருங்கக்காய் சூப்தான் இன்றைய ஸ்பெஷல் சமையல்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஆண்களுக்கு ஏற்ற Facial Mask


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..

பெண்களை விட ஆண்களுக்குதான் வெளியில் அலைச்சல் அதிகம். மர்கடிங் வேலை செய்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒரு முறை வெயிலில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும்.
எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலயே Mask போடுங்களேன்

வெள்ளரிக்காய் Mask 

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் அழகுப்போருலாகவும் பயன் படுகின்றது இது முகத்தில் இறந்து போன செல்களை அகற்றவும் , முகத்திற்க்கு தேவையான எண்ணை பசையை தக்க வைக்கவும் உதவுகின்றது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஏப்ரல் - 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..

ஏமாளிகள் இருக்கும் வரை

ஏமாற்றுபாவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

சக நண்பன் ஒருவனை - தான்

முட்டாளாக்கி விட்டதாய்

இன்னொரு நண்பன்

ஏளனமாய் சிரிக்கின்றான்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Funny Picture's 02

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
நேற்றைய பதிவில் பல Funny Picture's கலைத் தந்து இருந்தேன் இந்தப்பதிவு முந்தய பதிவின் தொடர்ச்சி இன்றும் உங்களுக்காக இணையதளங்களில் Collect செய்யப்பட சில Funny Picture's கலைப் பதிகின்றேன் முந்தய பதிவை பார்த்ததும் தன்னை அறியாமல் சிறிது இருப்பீர்கள் என்று நினைகின்றேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Learn Magic Tricks

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான் இந்த தளம்.

farhan magic trick farhanforyou
Magic என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து வயதினருக்கும் அலாதி பிரியம்
சிலருக்கு கடுப்பாகூட இருக்கலாம் பெரும்பாலானவர்களுக்கு Magic பார்ப்பது என்றால் ரெம்ப பிரியப்படுவார்கள்.

Magic என்றால் ஒரு விதமான கலை என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் எப்படி கற்றுக்கொள்வது என்பது பலருக்கு புரியாத/தெரியாத புதிராகத்தான் இருக்கின்றது.

Magic கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்காக இணையதளத்தின் மூலம் Magic கற்றுக்கொள்ள ஒரு அருமையான தளம் உள்ளது அந்தத்தளத்தை பற்றிய பதிவுதான் இது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Funny Picture's 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..

me,naan, thanvinai,படங்களை பார்த்ததும் உங்களை அறியாமலே சிரிப்பு வரும் என்று நினைகின்றேன்.

ஒரு இணையதளத்திலிருந்து இந்த புகைப் படங்களை சேகரித்து இங்கு பதிகின்றேன் சேமிக்க நினைக்கும் புகைப் படத்தில் தொட்டு சேமித்து கொள்ளுங்கள்.

இன்னும் பல புகைப் படங்களை இந்தப்பகுதியில் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நான் பதிவேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

வேப்பம்பூ ரசம்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
தேவையான பொருட்கள் :

samayal,intraya special,
வேப்பம்பூ - 01 மேசைக்கரண்டி (Table Spoon)

புளி - லெமன் (Lemon) அளவு

தண்ணீர் - 03 டம்ளர்

நெய் - 01 Tea Spoon

காய்ந்த மிளகாய் - 02

கடுகு - 1/2 அரை Tea Spoon

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ரசப்பொடி - 1/அரை Tea Spoon

செய் முறை :

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

புலங்களும் சாதனைகளும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
அறிமுகம்
 நாம் வாழும் இயல் உலகை (real world) பண்பு அடிப்படையில் (qualitatively) வேறுபட்ட பின்வரும் ஏழு களங்களாகப் (spheres) பிரிக்கலாம்.














  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மரண தண்டனை

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..


குற்றப்பத்திரிகை தாக்கலாகி

வாங்கவில்லை வாக்குமூலம்

சாட்சி விசாரணையின்றி

எழுதி வைத்த ஆயத்தத் தீர்ப்பு

உடனடி அமுல் மரண தண்டனை


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

SmoothDraw 3.2.11


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
நல்ல கலை வடிவமைப்புள்ள ஓவியங்களுக்கு என்றுமே கொஞ்சம் கராக்கி தான் ஓவியம் வரைவது என்றால் பேப்பரில் தான் வரைய வேண்டும் என்று இல்லை
இப்பொழுது கணனியில் ஓவியங்களை வரைவதட்க்கு என்று ஒரு மென் பொருள் உள்ளது அந்த மென் பொருளின் பெயர்தான்

SmoothDraw 3.2.11

இந்த மென் பொருளில் மிகவும் இலகுவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் இந்த மென் பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Google Doodles


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இது என்னுடைய வலைப்பூவின் 100 பதிவு.

farhan ,Google,Welcome
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக இந்தப்பதிவை பதிகின்றேன்...
இந்தப்பதிவு என்ன வென்று பார்த்தல் பல நேரம் நீங்கள் கவனித்து இருப்பீர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக Google இன் Logo மாறி இருப்பதை...
Google தளம் ஒவ்வொரு விசேட தினங்களுக்கும் அந்த தினத்திற்க்கு ஏற்றாப்போல் தனது Logo வை வடிவமைத்து அந்த தினத்தில் வெளியிடும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

Facebook Unfriend Finder


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைக்கு என்ன பதிவு போடலாம் என்று சில நிமிடம் யோசித்தான் அப்பொழுதான் ஞ்சாபாகம் வந்தது Chrome , Firefox , Safari , Opera , Internet Explorer Browser களுக்கு பொருந்தம் ஒரு நீட்சி (என்னடா இது நீட்சி அது இதோன்னு கேட்கின்றது விளங்குது வழமையான நம்மட பாசையில சொன்னால் மென்பொருள்) பற்றிய பதிவுதான் இது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் அறிமுகம் spokeo


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையத்தளம் உங்களுக்கு மிகவும் பயன் உள்ள தளம் என்று நான் நினைகின்றேன்.

இந்ததளத்தின் பெயர் spokeo

இங்கு உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் E-Mail ID கலை கொடுத்து அந்த E-Mail ID இல் என்ன விடயங்கள் இணையதளத்தில் பகிரப்பாட்டுள்ளது , என்ன விடயங்களை இணையதளத்தில் செய்து உள்ளார் என்று அறிந்து கொள்ள முடியும். இங்கு Name , Email , Phone,  Username , Address போன்றவற்றையும் Scan செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் அறிமுகம் National GeoGraphic KIDS

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என் கண்களில் புலப்பட்டது
அந்த இணையதளம்தான் இந்த தளம்

National GeoGraphic KIDS

இளம் சிறுவர்களுக்காக பல தளம் உள்ளது அனைத்தும் ஒவ்வொரு யுக்தியை பயன் படுத்தி சிறுவர்களின் மனத்தைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது அந்த வரிசையில் ஏற்கனவே ஒரு பதிவில் தமிழில் சிறுவர்களுக்கான இனைய பாடசாலை ஒன்றை அறிமுகம் செய்து பதிவு ஒன்றை பதிந்து இருந்தேன் அந்தப்பதிவை பார்க்க வில்லையாயின் இங்கு தொடுத்து அந்தப்பதிவையும் பாருங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

தன்மை மாராமல் கிடைக்கும் கிரீன்டி உடலுக்குத் தரும் பல நன்மைகள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...
நம்மில் அநேகர் தேநீர் சுவைக்கும் சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விடையம்தான்.

தேயிலை பிலக் டீ(Black Tea) , கிரீன் டீ (Green Tea) , வைட் டீ (White Tea
) ,
யெலே டீ(Yellow Tea) , ஊலாங் டீ என பல்வேறு வகைகலாக அவதாரம் எடுத்து உள்ளது.
இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும் தயாரிக்கப்படும் முறைகலும்,பதப்படுத்தப்படும் முறைகலும் வேருபடுகின்றன.
இவற்றின் விளைவாக பெரும்பாலான தேயிலை வகைகள் நல்ல மருத்துவ குனங்களை இழந்துவிட  இவற்றுள்  தன்மை மாராமல் அபபடியே நம் கைகளில் கிடைப்பது கிரீன் டீ (Green Tea) மட்டுமே.

ஜப்பானில் உள்ள டோகோஹு பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40530 நபர்களை வைத்து கிரீன் டீயை பற்றி மிகப் பெரிய ஆராய்சியை நடத்தினார்.
அது 1994ல் தொடங்கி 11ஆண்டுகளாக நீடித்தது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எண்ணற்ற பல்கலைகழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சி செய்தன.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...
இன்னும் பலர் படிக்க வேண்டும் என்பதற்க்காக GLOBAL ISLAM இன் facebook பக்கத்தின் பதிவை Copy செய்து இங்கு பகர்ந்து உள்ளேன்



பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...

இந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.

ஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.

இயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் என்னும் வடமொழிக் கவிஞன் இரவில் ஒளி வீசும் தாவரங்கள், மலைக் குகைகள் பற்றி வடமொழியில் கவி பாடியுள்ளான். அவனது காலத்தில் இப்படி ஓளி வீசும் தாவரங்கள் இந்தியாவிலும் இருந்தன போலும். ஆனால் இன்று உலகின் வேறு பகுதிகளில் மட்டுமே அவை உள்ளன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...
தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன்.

பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் ....



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....

                                          தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண் 16.
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

பதில்:

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஹிப்னாடிசம் (Hypnotism) உண்மையா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

கேள்வி : ஹிப்னாடிசம் என்றால் என்ன?, அது ஒரு விதமான கலையா? , அல்லது அனைவராலும் ஏலுமான காரியமா? , அடுத்தவருடைய சிந்தனையை கட்டுப் படுத்த முடியும் என்று சொல்வது சரியா?

பதில் : ஹிப்னாடிசம் (Hypnotism) என்ற சொல்லுக்கு தமிழில் நோக்கு வர்மம் என்று பெயர் இட்டு உள்ளனர்.

ஹிப்னாடிசம்(Hypnotism) மூலம் நொடிப்பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலயே எதிரியை வீழ்த்தவோ,
அல்லது தனது முன்னாள் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் BLOCKED IN CHINA

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
இன்றைய இணையத்தளம் அறிமுகப்பகுதிக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் இணையத்தளம் தான் இந்த

TEST IF ANY WEBSITE IS BLOCKED IN CHINA 

www.farhanforyou.blogspot.com
நாம் அனைவரும் செவியுற்று இருப்போம் அல்லது படித்து இருப்போம் சீனா வில் மிக அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டு (Block) உள்ள விடயம்
சீனாவில் எம்முடைய வலைப்பூ/வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளதா?

என்று அறிவதட்க்க்கு இந்ததளம் உதவுகின்றது சீனாவின் பிரதானமான 05 (Beijing,Shenzen,Inner Mongolia,Heilongjiang Province,Yunnan Province) நகரங்களில் உங்களுடைய வலைப்பூ/வலைதளத்தை சோதித்து அறிக்கை(Report) வழங்குகின்றது


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக உம்மு ஸமீஹா ஸமீஹா இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்

இருண்ட வாழ்க்கை
இந்தப் பதிவு ..யாருடைய மனதையும் புண் படுத்த அல்ல, 

இரத்தத்தை வேர்வையாக சிந்தி, தூக்கம் இழந்து ,பசியை மறந்து , உணர்வைத் தொலைத்து, பாசத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ..அன்புச்சகோதரர்களின் ...தியாகத்தைப் புரியாமல்..அவர்கள் கொடுத்து விடும் பணத்தை தான்றோடித் தனமாக செலவழித்துக் கொண்டிருக்கும் ....என் அன்புச் சகோதரிகளுக்காக இந்தப் பதிவு.....

வெளிநாட்டின் அவல வாழ்க்கையை வேதனையுடன் பகிர்ந்து கொண்ட ....ஒரு சகோதரரின் பதிவையே...உங்களுக்கும் ..பகிர்கிறேன்.....

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

தோல் நோய்கள் குறைய‌....


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....

பாட்டி வைத்தியம் இணையதளத்தில் இருந்து படித்த பதிவை நான் இங்கு பதிந்து கொள்கின்றேன்
கிழ்கண்ட மூலிகைகளை நன்றாக இடித்து மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டு தடவி வந்தால் சொறி, படை போன்ற தோல் நோய்கள் குறையும்.
கஸ்தூரி மஞ்சள்
கருஞ்சீரகம் 

தேங்காய் எண்ணெய்


அறிகுறிகள்:

சிரங்கு.
படை.



தேவையான பொருள்கள்:

சிவனார் வேம்பு = 25 கிராம்
சிறுதேக்கு = 25 கிராம்
கடுகு = 25 கிராம்
கருஞ்சீரகம் = 25 கிராம்
கஸ்தூரி மஞ்சள் = 25 கிராம்
நீரடிமுத்துக்கொட்டை = 25 கிராம்
தேங்காய் எண்ணெய் = 500 மி.லி

செய்முறை:

சிவனார் வேம்பு, சிறுதேக்கு, கடுகு, கருஞ்சீரகம், மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை நன்றாக இடித்து கொள்ள‌வும்.
நீரடிமுத்துக்கொட்டைகளை உரலில் போட்டு 100 மி.லி தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு இடித்து எண்ணெயோடு சேர்த்து அதை எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
ஒரு இரும்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இடித்து வைத்த நீரடிமுத்துக்கொட்டைகளை போட்டு 3 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து இடித்து வைத்துள்ள மூலிகைகளை போட்டு மீண்டும் 7 நிமிடங்கள் சிறு தீயாக எரித்து இறக்கி 24 மணி நேரம் அதை தெளிய வைத்து வடிகட்டி எண்ணெயை மட்டும் சுத்தமான பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.


உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணெயை மயிலிறகு அல்லது பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் காலை, மாலை தடவி சீகைக்காய் போட்டு குளிக்கவும்.
மேலும் பஞ்சால் நனைத்து கட்டு போட்டும் வரலாம். தினமும் கட்டை பிரித்து புதிதாக கட்ட வேண்டும்.

குறிப்பு:

நீரடிமுத்துக்கொட்டைகளை இடிக்கும் போது கை, முகம் மற்றும் மற்ற  இடங்களிலும் தெறிக்காமல் கவனமாக இடிக்கவும்.
சிறிது சிற்றாமணக்கு எண்ணெயை முகம் மற்றும் கைகளில் தடவி கொண்டு இடிப்பது மிகவும் நல்லது.



தொடர்பு உள்ள இடுக்கை
Beauty Tips 02
பாட்டி வைத்தியம் 01
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Beauty Tips
நபி[ஸல்]வழி மருத்துவம்!



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் WORD DYNAMO BETA


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யும் தளம் தான் இந்த

WORD DYNAMO BETA

இந்ததளம் உங்கள் மழலைகளுக்கு விளையாட்டு மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வழி செய்கின்றது , இந்த இணையத்தளம் மலைகளுக்கு மட்டும் அல்ல அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டு மூலம் ஆங்கிலம் சொல்லித்தருகின்றது.

எப்படி என்றால் இந்ததளம் ஒரு சொல்லைத் தரும் பின்னர் அது பற்றிய விளக்கம் உட்பட நான்கு கட்டங்களையும் தரும் அதில் எது சரி என்று தெரிவு செய்து அந்த விடையில் Click செய்தால் உங்களுக்கு உரிய Points அதிகரிக்கும்
தவறு என்றால் உங்கள் Points இல் குறிப்பிட்ட Points கழிக்கப்படும் இவ்வாறுதான் இந்த விளையாட்டை இந்ததளம் அமைத்து உள்ளது.



உங்கள் மழலைகளுக்கும் இந்த தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள் , நீங்களும் உங்கள் ஆங்கில அறிவை மெருகூட்டிக் கொள்ளுங்கள் தளத்திற்க்கு செல்ல தொடுப்பை திறந்துகொள்ளுங்கள்

தொடுப்பு (Link)



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Grammarly

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....
இன்றைய இணையத்தளம் அறிமுகப்பகுதிக்காக உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான் இந்த தளம்

Grammarly 


இந்ததளத்தின் விசேட அம்சம் என்ன வென்று பார்த்தால்
தற்காலத்தில் ஆங்கிலம் தெரியாத எவரும் இல்லை என்று சொல்லலாம் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் நல்லாக பேசுவார்கள் வாசிப்பார்கள் ஆனால் எழுதச்சொன்னால் எழுதுவதற்க்கு கடுமையாக யோசிப்பார்கள்
ஏன் என்றால் அநேகருக்கு எழுதும் போது அநேக எழுத்துப்பிழைகள் வரும் என்பதால் பலர் ஒரு ஆக்கத்தை ஆங்கிலத்தில் எழுதி விட்டு அதை சரி செய்வதற்க்கு நன்றாக ஆங்கிலம் கற்றவர்களை தேடிக்கொடுத்து சரி பார்ப்பார்கள் இவர்களுடைய குறையை போக்குவதட்க்கு இனைய உலகில் ஒரு அருமையான இணையதளம் உள்ளது என்றால் அது இந்த தளம்தான்



தொடுப்பை திறந்து Check Your Text எனும் பொத்தானை அழுத்துங்கள் பின்னர் வரும் பக்கத்தில் நீங்கள் எழுதிய ஆக்கத்தை Copy செய்து Past செய்து Start Review எனும் பக்கத்தை அழுத்துங்கள்

தொடுப்பு (Link)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

உங்கள் தள முகவரியை சுரிக்கிக்கொள்ளலாமே...


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....


எவ்வாறு சுருக்குவது என்று யோசிக்கின்றது எனக்கு புரிகின்றது
இதற்காக பல இணையதளங்கள் வெளியாகிவிட்டது அந்த இணையதளங்களின் முகவரிகளை தருகின்றேன்
இதில் Google நிறுவனத்தின் URL Shortener மிகப்பிரபலம் வாய்ந்தது தளத்தின் முகவரியை புத்தகக்குரிப்பில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

தளங்களின் முகவரி இதோ



01 www.goo.gl 
02  www.tinyurl.com
03  www.bitly.com
04 www.shorturl.com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....
                                                         தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண்: 17
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:



01. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

02. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஷா'.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஷா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார் - என்பதுதான்.
நன்றி ஒற்றுமை.Net


தொடர்பு உள்ள இடுக்கைகள் 

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் INDIA GET YOUR BUSINESS ONLINE

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக..
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தும் தளம்தான் இந்த தளம்


INDIA GET YOUR BUSINESS ONLINE 


இங்கு India வில் உள்ள வர்த்தகக் கம்பனிகளுக்கு ஒரு வருடத்திட்க்கு  இலவசமாக சொந்த பெயருடன் இணையத்தளம் ஆரம்பித்துக்கொள்ள முடியும்

India வர்த்தகர்களை கவரும் விதமாக Google இன் மற்றுமொரு புரட்சிகரமான சேவை என்ன்று சொல்லலாம்




தளத்திட்க்குள் செல்வதற்க்கு தொடுப்பை திறந்து கொள்ளுங்கள் அந்தத்தளத்தில் Video மூலமாக எவ்வாறு ஆரம்பிப்பது என்று சொல்லித்தருகின்றது இலகு படுத்த நான் அந்த வை பகிர்ந்துகொள்கின்றேன்

தொடுப்பு (Link)      


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஐஸ் காப்பி Ice Coffee


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய சமையல் பகுதிக்காக உங்களுக்கு சொல்லித்தரும் சமையல் குறிப்புதான் இந்தக்குறிப்பு 


தேவையான பொருட்கள் 
02 Tea Spoon கோப்பி (coffee)
375ml பால் (Milk)
04 Tea Spoon சீனி (sugar)
01 Spoon ஐஸ் கிரீம் (Ice Cream)











செய்முறை 

பாலையும் கோப்பியையும் சீனியையும் 50ml சூடான நீரில் ஊற்றி கலக்கவும் கலவையை 1-3 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும்

பின்னர் அதனை எடுத்து குவளையில் ஊற்றி விரும்பிய ஐஸ் கிரீம் சேர்த்து பரிமாறவும்




தொடர்புள்ள இடுக்கைகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

முதல் எதிரி யார்?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
நிலவில் முதலில் கால் வைத்தவர் யார் என்று கேட்டால் யாராக இருந்தாலும் உடனே நீள் ஆம்ஸ் ரோங் என்று சொல்லி விடுவீர்கள்.

நிலவில் முதலில் கால வைத்து இருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
பல பேருக்கு தெரியாது எட்வின் சி ஆல்ட்ரின் Edvin c Altrin அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பலோ விண்கலத்தின் விமானி (Pilot)

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமான படையில் பணி புரிந்தவர்
மேலும் வின்நடை அனுபவம் உள்ளவர் அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்
நீள் அம்ஸ் ரோங் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர் மிகுந்த தைரியசாலி என்பதால்தான் அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அவர் கோ பைலட் (Co-Pilot) அதாவது இணை விமானி



இவர்கள் சென்ற அப்பலோ விமானம் நிலவை சென்று அடைந்ததும் Go Pilot First என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அனால் ஆல்ட்ரினுக்கே மனதில் சின்ன தயக்கம்
நிலவில் முதன்முதலில் கால் எடுத்து வைக்க போகின்றோம் புவி ஈர்ப்பு விசை அற்ற இடத்தில் இருக்கின்றோம்

கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால் ,
எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால்? தயக்கத்தில் மணிக்கணக்காய் தாமதிக்க வில்லை சில நொடிகள்தான் தாமதித்து இருப்பார்

அதற்க்குள் நாசாவிடம் இருந்து Co-Pilot Next இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது நீள் ஆர்ம்ஸ் ரோங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்

உலக வரலாறு ஒரு நொடித் தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது
திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமத்தித்ததால் இன்று ஆள்ற்றினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைதான் இந்த உலகம் நினைவில் வைத்து இருக்கும் என்பது மட்டும்மல்ல
தயக்கம் பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.

இனி நிலவைப்பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

ஒரு நிமிட தயக்கம் நம் மிகப்பெரிய வெற்றிகளை தடுத்து விடுகின்றது நாம் எல்லோருமே மிகப் பெரும் சாதனைகளை படைக்கின்ற வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம் ,கூச்சம்தான் நம் முதல் எதிரி

நன்றி எங்கள் தேசம் Feb மாத இதழ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Image கலை Icon களாக மாற்றுவது எப்படி?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
Image கலை Icon களாக மாற்றுவது எப்படி?
இதற்காக ஒரு சிறிய மென் 1.46Mb பொருள் உதவுகின்றது அந்த மென்

பொருளின் பெயர்தான் Imagicon4.4



மற்ற மென்பொருள் மாதிரி இல்லாமல் மிக மிக எளிமையாக இந்த மென் பொருளை இயக்க முடியும்.

எப்படி என்றால் நீங்கள் Icon னாக மாற்ற நினைக்கும் Image ஜை இழுத்துக்கொண்டு வந்து இங்கு விட்டால் போதும்  Icon னாக மாரி உங்கள் Desktop இல் சேமித்துவிடும் அவ்வளவுதான் வேலை முடிந்து விட்டது





பதிவிறக்கம் செய்ய 


தொடர்புள்ள இடுக்கைகள் 


Mail கலை Back-up எடுக்க Gmail Backup




புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator


PDF 2 JPG Converter


AVG Anti-Virus Free 2012 12.0.1831


Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File


உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


சமூக வலைத்தளம் என்றால் அனைவருடைய மனதிலும் உதிக்கும் சமூக வலைத்தளம்தான் Facebook இந்த சமூக வலைத்தளத்தில் மட்டும் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.

Facebook இல் உள்ள விசேட அம்சங்களில் ஒன்றுதான் Chat வசதி
இந்த Chat Box இல் Online இல் இருப்பவர்கள் மட்டும் அல்ல Offlineஇல் இருப்பவர்களையும் கட்டும் வசதி உள்ளது.

இந்த Chat Box இல் Online இல் இருக்கின்றவர்களை மாத்திரம் காட்டும் படியாக வடிமைக்கப்பட்ட Chrome உலாவியிட்க்கு மாத்திரம் பொருந்தக்கூடிய ஒரு சின்ன மென் பொருளை Google நிறுவனம் தனது வாடிக்கயாலர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.



மென்பொருளை நிறுவ கீழ் கொடுக்கும் தொடுப்பை திறந்து +ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்தி நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் Chat Box சை பாருங்கள் வியப்படையும் விதமாக Online இல் இருப்பவர்களை மட்டும் காட்டும்.

நிறுவி இலகுவாக Online இல் இருக்கும் உங்கள் நண்பர்களை அறிந்து கொள்ளுங்கள்.

தொடுப்பு


தொடர்பு உள்ள இடுக்கை
Facebook Unfriend Finder 
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....
                                                         தமிழில் : அபு இஸாரா



கேள்வி எண்: 5
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

பதில்:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.



01. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

02. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary)  எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை'  (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

04. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

05. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

06. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

07. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

08. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

09. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

நன்றி ஒற்றுமை.Net



தொடர்பு உள்ள இடுக்கைகள் 

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1
Blogger Widgets