அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
மாம்பழம் சுவையானது அதை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லலாம். மாம்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இந்த மாம்பழத்தை அல்வாவாக சமைத்து எத்தனை பேர் உண்டு உள்ளீர்கள்?
உண்மையைச் சொன்னாள் இலங்கையில் நான் கேள்விப்பட்டதே இல்லை என்று சொல்லலாம்.சரி இன்று நாம் சமைத்துப்பார்ப்போம்
தேவையான் பொருட்கள்
நன்கு கனிந்த மாம்பழம் - ௦02
ரவை -02 Tea Spoon
நெய் - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
பொடி செய்யப்பட ஏலக்காய் - சிறிதளவு
பால் - 2/1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் (condensed milk) - 01 கப் அதாவது MilkMait
செய்முறை
கணித மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மசித்துக்கொள்ளுங்கள் (விழுதாகதாக்கிகொள்ளுங்கள் )
வாணலியில் ரவையை இலேசாக வறுத்து அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில், மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, இரு நிமிடங்கள் வதக்கவும்.
அதில் பால் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும்.
பின்னர் அதில் பொடித்த ரவையும், கண்டென்ஸ் மில்க்க்கும் (condensed milk) சேர்த்து நன்றாக கிளறவும்.நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.
அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறவும்
மாம்பழ அல்வா Ready
பின்னர் ஒருதட்டில் நெய் தடவி இறக்கி ஆறிய பின்பு நீங்களும் உண்டு பிறருக்கும் பரிமாறிக்கொள்லுங்கள்
சொல்லித்தந்த இணையதளங்களுக்கு ஒரு Tanks
தொடர்புள்ள இடுக்கைகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக