Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Beauty Tips 02


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


சருமம் மீன்ன வேண்டுமா?
அரை ஸ்பூன் ஜாதிக்காயுடன் மாசிக்காய் மற்றும் அன்னாசிப் பழச்சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உங்கள் முகம் பல பல என்று மின்ன வேண்டுமா?
02 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் (Coconut Milk) ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசிக் கழுவினால் உங்கள் முகம் ஜொலிக்கும்.



தோல் சுருக்கம் மறைந்து புதுப்பொலிவுடன் உங்கள் தோல் இருக்க வேண்டுமா?

03 முட்டைகளை(Egg) உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
01தேக்கரண்டி தேன், 02 தேக்கரண்டி பால், 2/1தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் (Olive Oil) ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் 4/1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் (Almond Oil) மற்றும் சூரியகாந்தி எண்ணெய் (Sun Flower Oil) ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.
வாரம் 01முறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.என்று ஒரு இணையத்தளம் சொல்லித்தந்தது

உங்கள் உதடுகள் வறண்டு விட்டதா?
வாரம் 02 அல்லது 03 நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா பூ போல மென்மையாக மாறும்.

சரும நோய்களை இல்லாதொழிக்க....
துளசி ,முருங்கை வேருடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து உடம்பில் 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் சரும நோய் தீரும்.

தொடர்பு உள்ள இடுக்கை
பாட்டி வைத்தியம் 01
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Beauty Tips
நபி[ஸல்]வழி மருத்துவம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets