Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் PDF MY url .COM


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


இன்றைய இணையதள அறிமுகம் பகுதி வாசகர்களுக்கு இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் தான் இந்த


PDF MY URL.COM

நாம் பார்த்த பிடித்த இனைய பக்கங்களை (Web Page),இணையதளங்களை (Web Sites) PDF கோப்புகளாக மாற்றுவத்தட்காக நாம் பல மென்பொருள்களின் உதவியை தேடிப்பெற இருக்கின்றது.

அவ்வாறு தேடிப்பெற்றுக்கொள்ளுவது மிக்க கடினமான விஷயம். ஆனால் இந்தத்தளத்திட்க்கு சென்று இலகுவான முறையில் இலவசமாக நீங்கள் படித்து பிடித்த தளங்களின் பக்கங்களை ,தளங்களை உங்கள் கணனியில் PDF கோப்புகளாக மாற்றி சேமித்து கொள்ள உதவுகின்றது இந்த தளம்.



தொடுப்பை(Link) திறந்து புத்தகக்குறியை(BookMarks) குறித்துக்கொள்ளுங்கள்.
இணையதளங்கள்/வலைப்பூ வைத்து இருப்பவர்கள் இந்த சேவையை இலகுவாக வழங்க முடியும் அது எப்படி என்று கேட்கின்றீர்களா? கீழ் கொடுக்கப்பட்டுள்ளவாறு தொடுப்பு ஒன்றை தயாரித்து உங்கள் பதிவுகளின் கீழ் அல்லது மேலே பதிந்து கொள்ளலாம். உங்கள் வாசகர்கள் மிக இலகுவாக உங்கள் பக்கத்தை PDF கோப்புகளாக பதிவிறக்கம் செய்து கொள்வார்கள்.

http://pdfmyurl.com/?url=http://farhanforyou.blogspot.com


சிகப்பு எழுத்துக்களில் உள்ளதட்க்கு பதிலாக உங்கள் பதிவின் சுட்டியை கொடுத்துக்கொள்ளுங்கள் 


Ex: இந்த வலைப்பூவை PDF ஆக பதிவிறக்கம் செய்துகொள்ள 


தொடுப்பு (Link)





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Beauty Tips 02


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


சருமம் மீன்ன வேண்டுமா?
அரை ஸ்பூன் ஜாதிக்காயுடன் மாசிக்காய் மற்றும் அன்னாசிப் பழச்சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உங்கள் முகம் பல பல என்று மின்ன வேண்டுமா?
02 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் (Coconut Milk) ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசிக் கழுவினால் உங்கள் முகம் ஜொலிக்கும்.



தோல் சுருக்கம் மறைந்து புதுப்பொலிவுடன் உங்கள் தோல் இருக்க வேண்டுமா?

03 முட்டைகளை(Egg) உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
01தேக்கரண்டி தேன், 02 தேக்கரண்டி பால், 2/1தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் (Olive Oil) ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் 4/1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் (Almond Oil) மற்றும் சூரியகாந்தி எண்ணெய் (Sun Flower Oil) ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.
வாரம் 01முறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.என்று ஒரு இணையத்தளம் சொல்லித்தந்தது

உங்கள் உதடுகள் வறண்டு விட்டதா?
வாரம் 02 அல்லது 03 நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா பூ போல மென்மையாக மாறும்.

சரும நோய்களை இல்லாதொழிக்க....
துளசி ,முருங்கை வேருடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து உடம்பில் 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் சரும நோய் தீரும்.

தொடர்பு உள்ள இடுக்கை
பாட்டி வைத்தியம் 01
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Beauty Tips
நபி[ஸல்]வழி மருத்துவம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Make your own ID cards


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


இன்றைய இணையய்தள அறிமுகப் பகுதி வாசகர்களுக்காக அறிமுகப்படுத்தப்போகும் தளம் உங்களுக்கு சொந்தமான இலவசமாக அடையாள  அட்டை(ID cards) தயாரித்துக்கொடுக்கும் தளம் பற்றியதுதான் இந்தப் பதிவு.

இன்று அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான் Make your own ID cards.


இந்த தளத்தில் இலகுவான முறையில் உங்களது அடையாள அட்டைகளை (ID cards) தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.

எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.

முதலில் கீழ் கொடுக்கப்படும் தளத்திட்க்கான தொடுப்பை (Link)
திறந்து கொள்ளுங்கள்.





பின்னர் உங்களுடைய புகை படத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் எப்படி பூர்த்தி செய்வது என்று Screen Shot இல் பார்த்து பூர்த்தி செய்யுங்கள் 



MY IC Ready 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

PDF 2 JPG Converter

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


Pdf File கலை Converter செய்வதற்க்கு பல தளங்களை நாம் நாடிச்செல்ல இருக்கின்றது
 ஆனால் அதற்க்காக ஒரு மென் பொருள் தற்பொழுது உள்ளது அதை பற்றிய பதிவுதான் இது.

அந்த மென் பொருளின் பெயர்தான் PDF 2 JPG Converter


இந்த மென் பொருள் மிகவும் எளிமையான முறையில் Pdf File கலை Converter செய்து தருகின்றது கீழே  உள்ள தொடுப்பை(Link)  திறந்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள.

இந்த மென் பொருளின் அளவு மிகச்சிறிய அளவுதான் அதாவது 1.95 Mb






தொடுப்பை (Link) திறக்க 

தொடர்புள்ள இடுக்கைகள் 


Mail கலை Back-up எடுக்க Gmail Backup




புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator


PDF 2 JPG Converter


AVG Anti-Virus Free 2012 12.0.1831


Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File


உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Azeem Bin Anwer இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்

''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)

"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)



"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414)

எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.

இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில் வீண் கேளிக்கைகளில், திரைப்படக் கூத்துகளில் கழிந்து கொண்டிருக்கின்றது.

இதே போலத் தான் அரபகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையின் அருமை பெருமை தெரியாமல், அரபக மக்களும் சரி! இங்கிருந்து போனவர்களும் சரி! வீடியோ பார்ப்பதிலும் வீணான காரியங்களிலும் ஈடுபட்டு அந்நாளின் புனிதத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சாரார் இந்நாளுக்குரிய அருமை பெருமைகளை, சிறப்புகளைத் தெரிந்து வணக்கங்களிலும் மார்க்க சொற்பொழிவுகளை ஏற்படுத்தி அதைக் கேட்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். இதுபோல் நன்மையில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையிலும் இந்நாளின் இன்ன பிற சிறப்புகளைத் தெரிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் ஜும்ஆ நாளின் சிறப்புகளையும் ஜும்ஆ நாளை சும்மா கழிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.
நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்

"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414)

உலகில் ஓர் உயர் நாள்

"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)

உதயமாகும் இந்நாளில் ஓதவேண்டிய அத்தியாயம்

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்)

இந்நாளில் ஓதப்படும் ஸலவாத் இறைத்தூதருக்குக் காட்டப்படல்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர்  ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: அபூதாவூத் 883)

(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. "நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 935)

ஜும்ஆ தொழுகை

வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல்

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்

"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198)

"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக,

"நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்" (அல்குர்ஆன் 6:160)

என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.

"ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 883)

முஸ்லிமில் அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 1381)

இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் "வாகனத்தில் வராமல்..." என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களின் முக்கிய கடமை

ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களில் மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள், அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த இதழில் காண்போம்.

இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.

"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)

இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?

பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள்

"ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை லி அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1416)

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்

"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 934)

"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1419)

''மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.


இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.


மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.


ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்" என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 939)

''கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.


அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினர்.


கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163,166)

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.

ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.

இதயங்கள் இறுகி விடும்

"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1432)

"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)

இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்

"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1043)

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!

நன்றி Azeem Bin Anwer Post

தொடர்பு உள்ள இடுக்கைகள் 
அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை


அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?


காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று....


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் ....


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ.....
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு....
இஸ்லாத்தின் பார்வையில் ...காதல்
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?


மறுமை வெற்றி யாருக்கு?


ஜின்களும் நாமும்


பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?


இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமியன் மணக்களாமா?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Free Berth Day Reminder

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் இது

Free Berth Day Reminder 

இந்தத்தளம் பற்றிச்சொள்ளப்போனால்....
இந்த இணையதளத்தின் பிரதான நோக்கம் உங்கள் நண்பர்களுடைய பிறந்தநாளை நினைவு படுத்தி பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு E-Mail மூலம் வாழ்த்து அட்டைகளை E-Cards அனுப்பிக்கொள்ளலாம்.

ஆனால் இந்த தளத்தை நாம் எமக்குப்பயனுள்ளதாக மாற்றிகொள்ளலாம் என்று நினைகின்றேன்.

அது எப்படி என்று பார்த்தல் ஒரு மாததிட்க்கு பிறகு அல்லது எப்பொழுதாவது ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அன்றைய தினத்தில் எமக்கு E-Mail மூலம் ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் , உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது உங்களுடன் வேலை பார்பவர்களுக்கு ஒரு வேலையை ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் நாம் பயன்படுத்தலாம்.

எவ்வாறு பயன்படுத்துவது என்று இப்பொழுது நான் சொல்லுகின்றேன்



முதலில் தொடுப்பை (Link) திறந்து தளத்திட்க்குள் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர் அங்கு ஒரு பயனர் கணக்கை User Account ஆரம்பிக்க வேண்டும்.

பிறகு E-Card பகுதிக்கு சென்று ஏதாவது ஒரு E-Card டை திறந்து நீங்கள் அனுபிகொள்ள நினைக்கும் நண்பருடைய E-Mail ID யை கொடுத்து கீழ் உள்ள Msg Box இல் நீங்கள் ஏதாவது ஒரு Msg ஐ எழுதி எப்பொழுது உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிப்பிட்டு Send ECard எனும் பொத்தானை அழுத்தினால் போதும் அந்த தளம் அதனுடைய Server வரில் அதை பதிந்து கொள்ளும்.

பின்னர் நீங்கள் குறிப்பிட்ட நாள் வந்ததும் நீங்கள் வழங்கிய E-Mail ID க்கு அந்ததகவலை அனுப்பும்.

அனுப்பியது உங்களுடைய Mail க்கு நீங்கள் பதிந்த தகவலை அனுப்பி விட்டதாக ஒரு மின் மடல் (E-Mail) வரும் அது மட்டுமல்லாமல் அவர்கள் உங்கள் தகவலை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மீண்டும்  உங்களுக்கு  அவர்கள் பார்த்து விட்டதாக ஒரு இலையான் கடிதம் (E-Mail) வரும்.

தொடுப்பு (Link)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் the Million Dollar Homepage

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் மிகவும் வித்தியாசமானது

அதுதான் the Million Dollar Homepage




இங்கு நீங்கள் 10,000 விளம்பரங்களை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

இந்த தளத்தை England இல் Business Management  கற்கும் Alex Tew எனும் 21வயது மாணவனால் தனது படிப்புச்செலவுகளுக்காக உருவாகாப்பட்டதாம் 

 நீங்களும் சென்று பார்க்கலாமே

இவரையும் இவருடைய தளம் சம்மந்தமான தகவலையும் Wikipedia இல் இருந்து பெற்றுக்கொண்டேன் 



தொடுப்பை (Link) திறக்க இங்கே சுடுக்கவும் (Click)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பெண்ணே புது அத்தியாயம் படை...


சில்லறை காசுக்காகவும்
    சிகப்பு தோலுக்காகவும்
அலையும் ஆடவன் மீது
   சீறிப் பாய இன்னும் ஏன் தாமதம்?


பெண்ணிணம் அடிமையினமா....?
     அடிமைத்துவம் அழிந்தது
அண்ணலின் வருகையால்
    உன் உரிமைக்காகப்
போராட இன்னும் ஏன் தாமதம்




பாலை வனம் பறந்து
    நேசித்த உறவையும்
நேசிக்கும் உறவையும்
    பிரிந்து பணம் படைக்கிறாய்
அவன் பருவ பசிக்கு...


நீ பகடைக் காயாவதை
     பகுத்தறிவால் பகுத்தறிய
இன்னும் ஏன் தாமதம்...?


 பெண்ணே...
 நீ காசு கொடுத்து
தாயாவதா...?
 பூப் போன்றவள்...
புதுமைகள் புரிதலில் பெண்ணினம்
 துளிர்க்கும் என்றால்
இன்னும் ஏன் தாமதம்...?


அல்லாஹ்
உனக்களிக்க சொன்ன
உரிமைகளை கேட்க
இன்னும் ஏன் தாமதம்?
உன் உரிமை
மஹர் அதைக் கேள்!
ஆடவர் மகர் தந்து
மணக் கட்டும்?
புது அத்தியாயம் பிறக்கட்டும்...

Tanks To YASS kky


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

எப்படி Google கணக்கை Back-up எடுத்துக்கொள்ளுவது?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


எப்படி உங்கள் Google கனணக்கை முழுவதுமாக Back-up எடுத்துக்கொல்லுவதை நான் இன்று உங்களுக்கு சொல்லித்தருகின்றேன்.







முதலில் இந்த Link கை திறந்து உங்கள் Google Mail ID யையும் Password டையும் கொடுத்து உள் நுழைந்து கொள்ளுங்கள்.











பின்னர் அங்கு உள்ள CREATE ARCHIVE எனும் பொத்தானை அழுத்துங்கள்.


Archive ஆவதற்க்கு சிலவேளை நேரம் எடுக்கலாம்...
Archiveஆன பின்பு கீழே தென்படும் Download எனும் பொத்தானை அழுத்தி முளுக்கனக்கையும் .zip File லாக பதிவிறக்கம் செய்யுங்கள்.

தொடர்புள்ள இடுக்கைகள் 
Mail கலை Back-up எடுக்க Gmail Backup

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....

                                                தமிழில் : அபு இஸாரா



கேள்வி எண்: 11
'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
'அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.



'அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்'.(அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்..'(அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் 'ஆரம'; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் - சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது - முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் - பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் - மற்ற இடங்களிலும் பரப்பலாம்.
பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் - பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து - ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் - மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் - நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:
அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.
'இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.' என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?'.
பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
'ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.'

சுற்றுப்புற - சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.

4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:
அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
'இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான.;'.
மேற்படி வசனத்தில் 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை 'துஹ்யா' என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி 'துஹ்யா' என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.

நன்றி ஒற்றுமை.net


தொடர்பு உள்ள இடுக்கைகள் 

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் deluxe templates


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான்

deluxe templates 

இவ்வினயதளம் வலைப்பூ /வலைத்தளம் வைத்து இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இந்தப்பதிவை நான் எழுதுகின்றேன்.

இந்தப்பதிவுடன் தொடர்பு உடைய பல இணையதளங்களின் முகவரிகளையும் கீழே தருகின்றேன்.
தேவையான தளத்திற்க்கு சென்று தேவையான Templates கலை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


இங்கு மிக அழகான Templates கலை இலவசமாக இவ்வினயதளம் வழங்கு கின்றது.

Blogger நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கு மட்டுமல்லாமல் Wordpress  நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கும் இங்கு பல அழகான Templates கல் உள்ளது.



தொடுப்பை கீழே தருகின்றேன் நீங்களும் சென்று உங்களுக்கு பிடித்த Templates கலை பதிவிறக்கம் செய்து உங்கள் தளத்தில் / வலைப்பூவில் நிறுவி உங்கள்  தளத்தின் / வலைப்பூவின் அழகை உணருங்கள்.

தொடுப்பு

மற்ற தளங்களின் முகவரி

DHE TEMPLATE


Ray Templates


BLOGGER TEMPLATES Free


Blogger Templates


The Blog Templates


Btemplates 


Blogger இல் உருவான தளத்திற்க்கு/வலைப்பூவிற்க்கு நிறுவுவது?



முதலில் உங்கள் Blogger கணக்கிட்க்குள் நுழைந்து
கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் வலைப்பூ / தளத்தின் கட்டுப்பாட்டகத்திட்க்குள் சென்று Template பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு உங்கள தளத்தின் Template டை பிரதி எடுத்துகொள்ளுங்கள் அதாவது அங்கு உள்ள காப்புபிரதி/மீட்டமை (Backup/Restore) என்று உள்ள Icon னை Click செய்யுங்கள்.
(எதற்காக காப்புபிரதி எடுப்பது என்றால் உங்களுக்கு நீங்கள் பதிவிறக்கம் செய்த பிடிக்க வில்லை என்றால் மீண்டும் பழையபடி கொண்டு வருவதற்காக....)

அங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்த Template டை பதிவேற்றுங்கள்
அவ்வளவுதான் Template டை நிறுவிவிட்டீர்கள்.




தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன் படுத்தும் போது அங்கு பல நண்பர்கள் பல இணையதள முகவரிகளை Share செய்து இருப்பார்கள்
அந்த இணையதள முகவரிகளை இலகுவாக Scan செய்து கொள்ள உதவுகின்றது இந்த சின்ன மென்பொருள்


இந்த மென்பொருளின் பெயர்தான் Dr.Web Anti-Virus Link Checker

கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்



அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.

அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்
பிறகு உங்கள் சமூக வலைதளங்களின் கணக்கை திறந்து உங்கள் நண்பர்கள் Share செய்து உள்ள Link கை Click பன்னியதும் 
இந்த மென் பொருள் Open ஆகி அந்த தள முகவரியை Scan செய்து தரும்
நீங்களும் நிறுவி பாருங்களேன்

தொடுப்பு 

பிற Browser களுக்கு 
Firefox / Thunderbird தொடுப்பு




Internet Explorer தொடுப்பு



Opera தொடுப்பு






Safari தொடுப்பு






தொடர்பு உள்ள இடுக்கை
Facebook Unfriend Finder 
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1
Blogger Widgets