Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

அல்லாஹ் மாத்திரமே கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை அறிகிறான் என்கிறது குர்ஆன் . இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....


கேள்வி எண்: 12.
அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.

பதில்:



1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்:
தாயின் வயிற்றில் உள்ள கரு ஆணா அல்லது பெண்ணா என்பதை பற்றி மாத்திரம் அறிந்தவன்தான் அல்லாஹ் என்று பலர் நம்பியுள்ளனர். ஆனால் அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸுரத்துல் லுக்மானின் 34வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.



'நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது: அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்..!'

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியைப் போன்று அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃது வின் 8வது வசனம் கீ;ழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும், அல்லாஹ் நன்கறிவான்: ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.'.

2. 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.

3. அருள்மறை குர்ஆனில் பால் (Sex) என்ற வார்த்தை குறிப்பிடப் படவில்லை.
அருள்மறை குர்ஆனை மொழியாக்கம் செய்தவர்களும், அருள்மறை குர்ஆனுக்கு விளக்கமளித்தவர்களும் - தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்று தவறான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அருள்மறை குர்ஆனை நீங்கள் படித்துப் பார்த்தால் - பால் (Sex) என்கிற வார்த்தைக்குச் நிகரான அரபு வார்த்தை அதில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மாறாக தாயின் கருவில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்கிற கருத்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

4. அல்லாஹ்வைத் தவிர, வேறு எவரும் கருவில் இருக்கும் குழந்தையின் தன்மையை முடிவு செய்ய முடியாது.
மேற்படி வசனம் குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பதை மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக கருவில் இருக்கும் குழந்தையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பதை குறிப்பிடுகிறது.

 அதாவது தாயின் கருவில் உள்ள குழந்தை எவ்வாறு இருக்கும்?, என்பதையும், அந்த குழந்தையின் தன்மை என்ன என்பதையும், கருவில் இருக்கும் குழந்தை அதனது பெற்றோர்களுக்கு அருட்கொடையாக இருக்குமா? அல்லது சாபக்கேடாக இருக்குமா? கருவில் இருக்கும் குழந்தை சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது தீமையாக அமையுமா? என்பதையும், குழந்தை நல்லதா? கெட்டதா என்பதையும், குழந்தை சொர்க்கத்திற்கு செல்லுமா?. அல்லது நரகத்திற்குச் செல்லுமா? என்பன போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதே மேற்படி வசனத்தின் பொருளாகும்.

முற்றிலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை வைத்திருக்கும் எந்த ஒரு அறிவியல் அறிஞரால் மேற்படி விபரங்களை எல்லாம் நிச்சயமாகச் சொல்ல முடியும்?

நன்றி ஒற்றுமை.Net

தொடர்பு உள்ள இடுக்கைகள் 

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 கருத்துகள்:

Mohamed Meera Sahib சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஃபர்ஹான்! ஒரு பதிவை இடும்போது அது எங்கிருந்து கிடைத்தது என்கிற விளக்கத்தையும் வெளியிட்டால் நலமாக இருக்கும். டாக்டர் ஸாஹிர் நாயக்கின் கேள்விபதில் பகுதிகளைத்தான் குறிப்பிடுகிறேன்.

agm farhan சொன்னது…

சகோதரரே நான் பெற்ற இணையதளத்தின் முகவரிக்கான தொடுப்பு மேலே உள்ளது இந்தப்பதிவின் தொடுப்பு கீழே உள்ளது நண்பா நீங்கள் சரியாக கவனிக்க வில்லை என்று நான் நினைகின்றேன் மீண்டும் ஒரு முறை பதிவைப்பாருங்கள்....
என்னுடைய தளத்திற்க்கு வந்து பதிவுகளை பார்ததட்க்கும் மற்று உங்கள் கருத்துரைக்கும் நன்றி jazakallah தினமும் வந்து செல்லுங்கள்

கருத்துரையிடுக

Blogger Widgets