Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Beauty Tips

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 


                                                          பொடுகுத்தொல்லைக்கு.....



அருகம்புல்லின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். 

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.


வசம்பை இடித்து நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடித்து தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும். 

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும்.
இவற்றை நீங்களும் பயன்படுத்தி அழகான நீண்ட கூந்தலை பெறுவீர்களாக.


                                              முகத்தில் சுருக்கங்கள் நீங்க.......


முட்டையின் வெள்ளைக்கருவுடன் சில துளி எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இக்கலவையை சுருக்கம் உள்ள இடங்களிலும் களுத்துப்பகுதிகளிலும் நன்றகத்தடவி உலரவிடுங்கள்.
பதினைந்து நிமிடங்களின் பின் கழுவிவிடுங்கள்.வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வர முகத்திலும்,கழுத்திலும் உள்ள
சுருக்கங்கள் நீங்கி விடும்.

                          வெய்யிலினால் ஏற்படும் கறுமையை போக்க........


வெள்ளரிச்சாறு தக்காளிச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து புளித்த தயிரில் கலந்து கறுத்த இடங்களில்பூசி
அரைமணி நேரம் ஊறியபின் குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுமை நீங்கிவிடும்.




                         உடம்பில் உள்ள உரோமங்களை நீக்க....


01.மஞ்சளை அரைத்து பன்னீர் கலந்து பூசிக்குளிக்கவும் வாரத்திற்கு இரண்டுமுறை செய்துவர விரைவில் உரோமங்கள் உதிர்ந்து விடும்.


02.மஞ்சளில் குப்பைமேனி சேர்த்து  அரைத்து பூசினாலும் உரோமங்கள் உதிர்ந்து விடும்.


              கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க....



கண்களை சுற்றி கருவளையமா கவலையே வேண்டாம் ஒரு டீஸ்பூன் கசகசா, அரை டீஸ்பூன் கடலைபருப்பு, ஒரு பாதாம்பருப்பு
இவற்றை பாலில் ஊரவைத்து அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் போய்விடும்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets