Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பாட்டி வைத்தியம் 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...



இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.
 பித்தப் பிரகிருதிகளுக்கு ( Bile to Prakriti) இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.

அதற்க்கு நல்ல மருந்துகளை வீட்டிலயே இலகுவாக தயாரிக்கமுடியும். உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.
பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது.
தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும்.
வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

 இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் (  shade) காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும்.
காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும்.
 பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம்.
இளநரைக்கு நல்லது.




தலைக்குச் சாயம் (Hair Dye)

நீங்கள் உங்கள் கேசத்திட்க்கு நிறம் பூசுபவரா? அதை நீங்களே தயாரித்து பூசிக்கொள்ளுங்கள்அதட்க்கு இதோ சில இலகுவான வழிகள் 
.
01.சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். 
02.கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். 
 03.கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். 
மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
 இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். 
சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.
04. செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும்.
 இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.
05. மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான்.
 வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

வழுக்கை (Baldness) 

உங்களுக்கு தலை வழுக்கையா? வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் அவ்வழிகள் இதோ...

01.எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும்.
 02.ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். 
03.ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.(இது முடியாது அப்படீன்னு நினைகின்றேன் )
04.அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். 
05.பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். 06.த்ரிபலா க்ஷரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss) 

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

ஷாம்பூ (Shampoo)

அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. ஆனால் இவற்றுக்கு ஒப்பான ஒரு கலவையை வீட்டில் தயாரித்து நாம் பயன்பெற்று பணத்தையும் சேமிக்கலாம் இதோ அதற்கான வழி

01.சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. 
02.தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வளுவளுப்பாக  வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். 
03.சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் 1 பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.


நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் இன்ஷா அல்லாஹ் நல்ல பயன் கிடைக்கும் 

*அனைத்துதகவல்களும் இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொண்டவை*

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


பலரும் படித்து  பயன் பெற வேண்டும் என்பதற்காக Cuddalore MuslimFriends இன் Facebook  பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன் 



திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)


01.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளதுஎன்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

02.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, 
கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

03.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்)

04.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

05.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

06.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.

07.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்.

ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

08. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

09. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்போன்வற்றை தவிருங்கள்)

நன்றி  Cuddalore MuslimFriends Post

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மனித மூளை ,மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும்,
மனித உறுப்புகளில் சிக்கலானதுமாகும் 

மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும் இச்சை இன்றிய செயற்பாடுகளான   மூச்சு விடுதல் ,செரிமானம், இதயத்துடிப்பு,கொட்டாவி விடுதல் போன்ற செயற்பாடுகளையும் 
விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனைபுரிதல் , ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்திகிறது இதில் மூளையை பாதிக்கும் விசயங்களும் இருக்கின்றன.

காலை உணவு

காலை உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் இரத்தத்தில் குறைவான அளவே சக்கரை இருக்கும் இது மூளைக்கு தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துகளையும் கொடுக்காமல் ஆக்கி மூளை அழிவுக்கு காரணமாகிவிடும்.

அதிகமாக சாப்பிடுவது 

மிக அதிகமாக சாப்பிடுவதன் மூலம் இரத்தநாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகின்றது.

புகைப் பிடித்தல் 

புகைப் பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்சைமர்ஸ் வியாதி வருவதற்க்கு காரணமாகிறது.

சக்கரை சாப்பிடுதல் 

நிறைய சக்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதை தடுக்கின்றது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகின்ற்றது. 

சுவாசித்தல்

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல் ,நமக்கு தேவையான ஆக்சிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கின்றது.மூளைக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளை பாதிப்படையும்.

தூக்கமின்மை 

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் . வெகுகாலமாக தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். 

போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது 

தலையை மூடிக்கொண்டு தூங்குவது போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கின்றது. இது நீங்கள் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜனைக் குறைகின்றது குறைவான ஆக்சிஜன் மூளையை பாதிக்கின்றது.

நோயுற்ற காலம் 

நோயுற்ற காலத்தில் மூளைக்கு மிக அதிகமாக வேலை கொடுப்பதும்,  
தீவிரமாக படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான  பின்பு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை 

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேட்கொள்ளாமல் இருப்பது, மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும்  சிந்தனைகளை மேட்கொல்லுவதால் மூலையில் புதுப் புது இணைப்புகள் உருவாகின்றது அதனால் மூளை வலிமையான உறுப்பாக மாறுகின்றது.

பேசாமல் இருப்பது 

அறிவு பூர்வமான உரையாடல்களை மேட் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையை இனி நன்றாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Find Sounds

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

    இன்றைக்கு என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான்

Find Sounds

 இந்த இணையதளத்தின் சிறப்புகள என்னவென்று பார்த்தல் இங்கு நாம் கேட்க்காத விலங்குகளின் ஒலிகள் , பறவைகளின் ஒலிகள் , இயற்கையின் ஒலிகள் , Office சில் கேட்க்கும் ஒலிகள் உதாரணமாக ஒரு Cash Counter டரில் எப்படி வாடிக்கையாளர்கள் பேசும் போது கேட்கும் ஒலி ,வாகனங்களின் ஒலி இது போன்ற நிறைய வகையான ஒலிகளை உங்களுக்கு தேவையான அளவில் உங்கள் கணனிக்கு AIFF,AU,MP3,WAVE,mono,stereo போன்ற Formats கலில்  பதிவிறக்கம் செய்து கொல்லமுடியும்



உங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஒலிகளையும் இந்ததளத்தில் தேடி பெற்றுக்கொள்ள முடியும்

 நீங்களும் சென்று பாருங்களேன்


தொடுப்புக்கு இங்கே சுடுக்குங்கள்
தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக


இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். என நானா நம்புகின்றேன் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click) . 


 PTC (Paid To Click) . என்றால் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா? 



PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTC தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.


PTC இணையதளத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது ?




கணனி முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க
PTC இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.
மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் 
பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன. 




எப்படி PTC இணையதளங்களில் பணம் பெறுவது ?


PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் 
தொகை வந்தவுடன் ( MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம். எல்லா 
PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட இரண்டு பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.


01.ALERTPAY கணக்கு மூலம் 
02.Paypal கணக்கு மூலம் 


இந்த இரண்டு பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது சுலபமான 
ஒன்றுதான். இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன. நான் இங்கே நிலையான 
PTC தளங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.


CLIXSENSE







CLIXSENSE  PTC இணையதளத்தை பற்றிய சிறு குறிப்பு 


CLIXSENSE PTC இணையதளம் 2007 முதல் இயங்கி வருகிறது.
நான் இந்த பதிவை எழுதும்போது CLIXSENSE இன்மொத்தஉறுப்பினர்களின்
எண்ணிக்கை 1,842,520  CLIXSENSE அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகையின் மதிப்பு $1,922,513.49  
CLIXSENSE இல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் 
1)      விளம்பரங்களை பார்வையிடுதல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10
          முதல் 20 வரையிலான விளம்பரங்களை பார்க்கலாம். டூல் பார் 
          இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்வையிடலாம் 
 2)     CLIXGRID விளையாட்டு ஒரு நாளைக்கு 25 முறை வாய்ப்புகள்   
          வழங்கப்படும் அதில் சுலபமாக 5 $ வரை சம்பாதிக்கலாம்.
3)      உங்களது நண்பர்களை பரிந்துரைத்தல் (Refer your friends to join clixsense )
4)      CLIXSENSE இல் நாம் சம்பாதித்த பணத்தை  ஒவ்வொரு  
          திங்கட்கிலமையிலும்   
         பெற்றுக்கொள்ளலாம் . குறைந்த பட்ச பணம் எடுக்கும் தொகை 10 $ .
5)      பணம் பெரும் வழி முறை --- ALERTPAY / PAYPAL /check


       CLIXSENSE இல் உறுப்பினராக இங்கே சுடுக்குங்கள்






INCENTRIA 







INCENTRIA  PTC இணையதளம் 2007 முதல் இயங்கி வருகிறது 
       INCENTRIA PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் 
1)      விளம்பரங்களை பார்வையிடுதல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்
          10 முதல் 20 வரையிலான விளம்பரங்களை பார்க்கலாம்.
2)       உங்களது நண்பர்களை பரிந்துரைத்தல்
         (Refer your friends to join Incentria under your affiliate link )
3)      COMPLETE OFFERS , TRAFFIC EXCHANGE
4)      INCENTRIA இல் நாம் சம்பாதித்த பணத்தை மூன்று நாட்கள் முதல் 
          ஒரு வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் குறைந்த பட்ச பணம்   
          எடுக்கும் தொகை 1  $ .
5)      பணம் பெரும் வழி முறை --- ALERTPAY / PAYPAL


INCENTRIA   இல் உறுப்பினராக இங்கே சுடுக்குங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளகம் Kuvva

அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....


 இன்றைய இணையதள அறிமுகத்திற்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு தேடு பொறியில் அழகான Wallpapers கலை வழங்கும் இணையதளங்களை தேடிய பொழுது பல இணையதளங்களை பார்க்க முடிந்தது 
அவ் இணையதளங்களின் பட்டியலை கீழே தருகின்றேன் 
அவ் வினயதலங்களில் ஒன்றை நான் இன்று அறிமுகம் செய்ய இருக்கின்றேன் அவ்வினயதலம்தான்


Kuvva



 இந்த இணையதளத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன வென்று பார்த்தால் இதில் மிக அழகான பல Wallpapers கல் இருக்கின்றன அந்த Wallpapers கலை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் முதலில் நீங்கள்  ஒரு பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் 
Sign up எனும் பொத்தானை அழுத்தி உங்களை  பதிவு செய்யுங்கள் 
பின்னர்  உங்கள் மின்னஞ்சலை உறுதி செய்து விட்டு 
கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் Wallpapers களின் பட்டியலில் உங்களுக்கு பிடித்த Wallpapers கலை Select செய்து பின்னர் 
உங்கள் கணனியின் Desktop அளவை கொடுத்து பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம்
தொடுப்பை தொடுத்து இணையதளத்துக்குள் நுழையுங்கள் தொடுப்பு

தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES
chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....
தமிழில் : அபு இஸாரா
கேள்வி எண்: 28
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


பதில்:



1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்:
இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கையில் இருக்கிறது. இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அச்சிட்டும், ஒலி-ஒளி பரப்பியும் வருகின்றன். இந்த ஊடகங்கள் இஸலாத்தைப் பற்றிய தவறான தகவல்களை தருவதையும், இஸ்லாமிய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளன.

எப்போது, எங்கு வெடிகுண்டு வெடித்தாலும் - எந்தவித ஆதரமுமின்றி - முதன் முதலில் குற்றம் சாட்டப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று தெரியும் பட்சத்தில் - அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாத செய்தியாக மாறிவிடும்.

ஓரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர் 15 வயது பெண்ணை - அந்த பெண்ணிண் சம்மதத்தோடு - திருமணம் செய்து கொண்டால் அந்த செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதே சமயம் ஐம்பது வயது முஸ்லிம் அல்லாத ஒருவர் 6வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு விட்டால் அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாமல் - செய்திக் குறிப்புகள் போன்று பிரசுரிக்கப்படும். அமெரிக்காவில் தினமும் 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. அந்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஏனெனில் வல்லுறவு குற்றங்கள் செய்வது அமெரிக்கர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டது.

2. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் உண்டு.
இஸ்லாமியர்களில் சிலர் நம்பிக்கை, நாணயம் அற்றவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த ஊடகங்கள் இஸ்லாமியர்கள் மாத்திரம்தான் இவ்வாறு இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் சிலர் குடிகாரர்களாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் இஸ்லாம் அல்லாதவர்களில் பெரும்பான்மையோர் குடிகாரர்கள் என்பது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

3. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்களே சிறந்தவர்கள்:
இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு சில குற்றவாளிகள் இருந்தாலும் - உலகில் உள்ள மொத்த சமுதாயத்துடன் இஸ்லாமியர்களை ஒப்பிடும்போது - இஸ்லாமியர்கள்தான் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள். இஸ்லாமியர்கள் மது அருந்துவதை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்கள்தான் உலகத்திலேயே அதிகமாக தர்மம் வழங்குபவர்கள். நன்னடத்தை, பண்பாடு, மனித மாண்புகளைப் பொறுத்தவரை இஸ்லாமியார்களோடு வேறு எவரையும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

4. வாகனம் ஓட்டுபவரை வைத்து வாகனத்தை பற்றிய கணிப்புக்கு வர வேண்டாம்.
ஒரு புதிய மாடல் 'மெர்ஸிடிஸ் கார்' சிறந்ததா இல்லையா என்பது பற்றி அறிய வேண்டுமெனில் - அந்த காரை ஓட்டுபவரை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. காரை ஓட்டுபவர் திறமை சாலியாக இல்லாமல் இருப்பதால் 'மெர்ஸிடிஸ் கார்' சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு கார் சிறந்ததா இல்லையா என்று அறிய வேண்டுமெனில் காரை மோசமாக ஓட்டுபவரை வைத்து - கார் சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த காருடைய திறமை என்ன?. அந்த காருடைய மற்றுமுள்ள பயன்கள் என்ன?. அந்த கார் என்ன வேகத்தில் செல்லும் - அந்த காருடைய எரிபொருள் நுகர்வு என்னவாக இருக்கும் - அந்த காருடைய பாதுகாப்புத் தன்மை என்ன?.. எனபதையெல்லாம் வைத்துதான் மேற்படி கார் சிறந்ததா? இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். ஒரு வாதத்திற்காக இஸ்லாமியர்கள் நல்லவர்கள் அல்ல என்று வைத்துக் கொண்டாலும், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களை வைத்து - இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. இஸ்லாம் எந்த அளவுக்கு சிறந்த மார்க்கம் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டுமெனில் - இஸ்லாத்தின் உண்மையான - தெளிவான ஆதாரங்களான - அருள்மறை குர்ஆனையும் - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

5. இஸ்லாத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர, இஸ்லாமிய கடமைகளை சரிவர பின்பற்றியவர்களை பாருங்கள்.
இஸ்லாத்தை சரிவர பின்பற்றியவர்களில் முதன்மையானவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:
ஒரு வாகனத்தைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டுமெனில் - அந்த வாகனத்தை இயக்கக் கூடிய ஒரு சிறந்த வாகன ஓட்டியை வைத்து - வாகனத்தை இயக்கினால்தான் வாகனத்தை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். அதுபோலவே - இஸ்லாத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர - இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றுவதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய - அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பார்க்க வேண்டும் இஸ்லாமியர்கள் அல்லாத - ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் - அல்லாஹ்வின்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் சிறந்த மாமனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மைக்கேல் எச். ஹார்ட் எழுதிய 'தி ஹன்ட்ரட் மோஸ்ட் இன்ஃபுளுயன்சியல் மென் இன் ஹிஸ்டரி'  (The Hundred Most Influential Men in History) என்ற புத்தகத்தில் - மனித மனங்களை கவர்ந்த நூறு மனிதர்களில் முதலிடம் வகிப்பது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு சிறந்த மரியாதை வழங்கிய வரலாற்று ஆசிரியர்களில் தாமஸ் கார்லில்,  (Thomas Carlyle) லா-மார்டின் (La - Martin)ஆகியோரும் அடங்குவர்.

நன்றி ஒற்றுமை.net

தொடர்பு உள்ள இடுக்கைகள் 

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Sell My Mobile

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக 


இன்றைக்கு நம்ம வலைப்பூ வாசக நண்பர்களுக்கு என்ன Website  டை அறிமுகம் செய்யலாம் என்று தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு நல்ல பயன் உள்ள Website ஒன்று என் கண்களில் புலப்பட்டது 

Sell My Mobile 

இதில் உள்ள விசேட அம்சங்கள் என்னவென்று பார்த்தல் நீங்கள் பாவித்து பழுதடைந்த Mobile Phone கலை நல்ல நியாய விலையில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
இங்கு நீங்கள் விற்கும் பாவித்த or பழுதடைந்த உங்கள் Mobile Phone கலை  வாங்குவதற்க்கு  பல நிறுவனங்கள் தங்களுடைய விலைப் பட்டியலுடன் இவ்வினயதலத்தில் காத்துக் கொண்டு உள்ளார்கள்


 முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழ் காணும் முகவரியை சொடுக்கி அவ வினயதலத்திட்குள் நுழையுங்கள்
 பின்னர் அங்கு உள்ள Search Box இல் நீங்கள்  விற்க்க  நினைக்கும் உங்களுடைய Mobile Phone Brand (eg:Nokia) டையும்   பின்னர் உங்களுடைய Mobile Phone Model Number (eg:5800) ரையும் Type செய்து உங்களுடைய Mobile Phone Model லைத் தெரிவு செய்யுங்கள் 

பிறகு உங்கள் Mobile Phone கலை வாங்கும் நிறுவனங்களை நீங்கள் தெரிவு செய்த பின் Sell Now  எனும் பொத்தானை அழுத்துங்கள் 

சுட்டிக்கு சுடுக்குங்கள்

உதாரணமாக RPC RECYCLE  எனும் நிறுவனத்தை நீங்கள் தெரிவு செய்தால் கீழ் கண்டவாறு Window  வரும்
 எத்தனை Phone என Type செய்த பின் Sell எனும் பொத்தானை அழுத்துங்கள் 

 
இதில் உள்ள continue எனும் பொத்தானை அழுத்துங்கள் டை இவ்வினயதலத்தில் கலை நிறுவனங்களை உதாரணமாக எனும் நிறுவனத்தை நீங்கள் தெரிவு செய்தால் கீழ் கண்டவாறு வரும் இதில் உள்ள அழுத்தி அடுத்து வரும் வில் உங்களைப்பதிவு செய்து கொள்ளுங்கள் 

பிறகு உங்களை உறுதிப்படுத்திவிட்டு Setep பை complete செய்யுங்கள் 
அதன் பிறகு அவர்கள் தரும் விலாசத்திட்க்கு உங்கள் Mobile Phone கலை தபாளிடுங்கள் அவர்களிடம் Mobile Phone  உங்கள் போன் கிடைத்த  பின்னர் உங்கள் Paypal கணகிட்க்கு or காசோலையாக உங்கள் விளசத்திகு தபாளிடுவார்கலாம்

தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் iPiccy



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.. 




Photo Editing செய்றது என்றால் நம் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள்தான் Photoshop 
இந்த மென்பொருளில் அனைவரும் சிறந்த முறையில்  Photo Editing செய்ய  மாட்டார்கள். அப்படி சிறந்த முறையில் Photo Editing  செய்ய வேண்டும் என்றால் Photoshop மென்பொருளை முழுமையாக கற்று   இருக்க வேண்டும் இவை எல்லாம் சிரமம் என்று நினைப்பவர்களுக்கு இணையதளத்தில் பல Photo Editing Web sites இருக்கின்றது அவ்வினயதலங்களில் மிகவும் இலகுவாக   Photo Editing 
செய்யகூடிய இணையத்தளம் ஓன்று என் கண்களில் புலப்பட்டது, இதில் உள்ள விசேட அம்சம் என்னவென்றால் Quick UploadingQuick  Preview, Facebook இல் உள்ள புகைப்படங்களை நேரடியாக Editing செய்ய முடியும், வித்தியாசமான Photo Effects, Quick Saving மற்றும் பல சிறப்பு அம்சங்களை இலகு படுத்துவதற்காக இவ்வினயதலத்தில் உட்புகித்தி உள்ளாகள். நீங்களும் சென்று Editing செய்து பரிசோதித்து பாருங்களேன்......


இணையதள முகவரி இங்கே சுடுக்குங்கள் 

தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets