Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? : முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "சங்கேத" வார்த்தை அம்பலம்!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இவ்வாறான தகவல்களை இன்னும் பலர் அறிய வேண்டும் என்பதற்காக மறுப்பு இணையதளத்தின் இந்த பதிவை எடுத்து இங்கு பதிந்து உள்ளேன்

OCT 8, குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க,  ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,

என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர்  என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.    

   
                                                                                                                                                                     சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற இந்த என்கவுண்டர் வழக்கில், தற்போது கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் "போலீஸ் பித்தலாட்டங்கள்" வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாதிக் ஜமாலை சுட்டுக்கொன்ற குஜராத் போலீஸ், அது குறித்த "எப்.ஐ.ஆரில்" சாதிக் ஜமாலை தாங்கள் "மட்பேட்" என்ற இடத்தில் வைத்து கைது செய்ததாகவும், அப்போது அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாதகவும் (அதுவும் குஜராத் கலவரம் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்று) பதிவு செய்துள்ளனர். பின்னர், தப்ப முயன்றபோது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான குழு, சுட்டுக்கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது.      

   சி.பி.ஐ விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான இதே குழு தான், சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட பலரையும் என்கவுண்டர் முறையில் கொன்றது,தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், எல்லா என்கவுண்டர்களிலும் ஒரே துப்பாக்கி (.38 mm ரக துப்பாக்கி) பயன்படுத்தி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதும் "பாரன்சிக் ரிப்போர்ட்" மூலம் சி.பி.ஐ. கண்டு பிடித்துள்ளது. எனவே, இது எதேச்சையாக நடத்தப்பட்ட என்கவுண்டராக இல்லாமல் திட்டமிட்ட சதி என்பதற்கான மேலும் ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்ட சி.பி.ஐ.க்கு அதிர்ச்சியளிக்கும் "தொலைபேசி உரையாடல்" உள்ளிட்ட பல  ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
                                                                                                                                                                                                                    சம்பவத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர போலீசிடம் தொலைபேசியில் பேசிய குஜராத் இன்ஸ்பெக்டர், பலி கொடுக்க ஏதாவது "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்கிறார், ஆம்.ஒரு சேவல் இருக்கிறது, கொண்டு செல்லுங்கள் என மறுமுனையில் பதில் வருகிறது. அதை தொடர்ந்து, குஜராத் போலீஸ், ஜீப்பில் மகாராஷ்டிரா வந்தது. கணக்கில் காட்டப்படாமல் விசாரணைக்கைதியாக தங்கள் வசம் இருந்த சாதிக் ஜமால், குஜராத் போலீசிடம் ஒரு பூங்காவில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார். குஜராத் போலீசும் கைது குறித்து பதிவு செய்யாமல், பலி கொடுக்க "சேவல்" கிடைத்த சந்தோஷத்தில், சில நாட்கள் சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்திருந்துவிட்டு கச்சிதமாக என்கவுண்டர் செய்திருப்பது,தெரிய வந்துள்ளது.

எனவே, குஜராத் இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான 7 பேர் கொண்ட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் குழு, இவர்களுக்கு உடந்தையாக செயல் பட்ட மகாராஷ்டிரா வை சேர்ந்த, 2 "டி.எஸ்.பி.ரேன்க்" போலீஸ் அதிகாரிகள், மற்றும் சாதிக் ஜமால் ஒரு பயங்கரவாதி என சித்தரித்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 12 நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,என தெரிகிறது.  
                                                                                                                                                                                    சி.பி.ஐ., விசாரணையை முழுமையாக நடத்திவிட்டதாகவும், இன்னும் மகாராஷ்டிர போலீசில் ஓரிருவரிடம் விசாரணையை முடித்த பிறகு, மேற்கண்ட 12 "காவல்துறை கறுப்பாடுகள்" மீதும், அடுத்த மாத ஆரம்பத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும்,என சிபிஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நன்றி மறுப்பு இணையதளத்தின் பதிவு 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets