அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்னும் பலரை சென்று அடைய வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் (பக்கம்) இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..
இராக்கியர்கள் 1,455,590 பேர் மற்றும் 4,801 அமெரிக்கர்களின் மரணம், மில்லியன் கணக்கான விதவைகள், ஐந்து மில்லியன் அனாதைச் சிறுவர்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், அழிக்கப்பட்ட உட்கட்டுமானம், மற்றும் சட்டம் ஒழுங்குகளின் முழுமையான சீர்குலைவு என்பன அண்மையில் உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்ற அமெரிக்க நேச நாட்டு படையணிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு யுத்தம் இராக்கில் அறுவடை செய்த விளைவுகள்.
ஏறத்தாள ஒரு அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையில் இருந்த இராக் யுத்தத்தின் விளைவாக மீண்டும் கற்கால யுகத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த யுத்தம் பல ட்ரில்லியன் டாலர் நஷ்டத்தை அமெரிக்காவுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள காலப்பகுதியில் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க படையணிகளின் வாபஸ் பெறுகையை ‘ஒரு அசாதரான அடைவு’ என்றும் இராக்கில் அமெரிக்க படைகளின் இலக்கு அடையப்பட்டு விட்டது என்றும் வருணித்துள்ளார். எனினும் உண்மை நிலை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஆயிரக்கணக்கான் அமெரிக்க ஒப்பந்த காரர்கள் அமெரிக்காவில் இன்னும் உள்ள அதே வேளை வன்முறைகள் மீண்டும் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். சில அறிக்கைகளின் பிரகாரம் அமெரிக்க படையணிகளின் வாபஸ் ஈரான் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல்களை மேற்கொள்வதை இலகுவாக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
ஈராக்கிய ஆக்கிரமிப்புகளை நோக்கும் ஒருவருக்கு ஈராக்கில் அமெரிக்க நேச நாட்டு படையணிகளின் நோக்கம் அல்லது இலக்கு எதுவாக அமைந்திருந்தது, மற்றும் ஆக்கிரமிப்பினால் எவ்வாறான இலக்குகள் அடையப்பட்டன என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
7000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மெசபதோமியா, சுமர், அக்காத், பாபிலோனியன், மற்றும் அசிரியா போன்ற உன்னத நாகரிகங்களை உலகுக்கு கொடுத்த தேசம் ஒரு நூற்றாண்டாக ஐரோப்பிய காலனித்துவ சக்திகளினால் ஒரு நூற்றாண்டாக தொடர்ந்தேட்சையாக சூறையாடப்பட்டு வந்துள்ளது. ஆரம்ப கால கட்டத்தில் பிரித்தானியாவாலும் பின்னர் அந்த நாட்டின் எரிபொருள் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியதினாலும் சூறையாடப்பட்டது.
1990 களில் அமரிக்காவினால் திட்டமிடப்பட்டு ஈராக்கிய அரசினால் அரங்கேற்றப்பட்ட குவைத் ஆக்கிரமுப்பும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் ஈராக்கிய மக்களுக்கு சொல்லொண்ணா துன்பங்களை விளைவித்தது. மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தீவிரமான போஷாக்கு பற்றாக்குறை, பயங்கர தொற்று நோய்கள், கருச்சிதைவுகள் என்பற்றுக்கு முகம் கொடுத்ததோடு அவர்களின் சராசரி ஆயுட்காலமும் குறிப்பிடத்தக்களவு குறைந்தது. ஐக்கிய நாடுகளின் கண்மூடித்தனமான பொருளாதார கட்டுப்பாடுகளினால் குறைந்தது 500,000 சிறுவர்கள் மரணமடைந்தனர்.
இந்த பேரவல நிலையில் தான் 2003 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்ற ஒரு கற்பனையான குற்றச்சாட்டை முன்வைத்து தனது அடிவருடி நாடுகளுடன் சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தார். அக்கால கட்ட அமெரிக்க ஊடக தகவல்களின் படி ஜார்ஜ் புஷ் பதவிக்கு வருமுன்னரே ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை தனது காலனித்துவ நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார் என அறிய முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் ஆயுத கண்காணிப்பாளர் ஹான்ஸ் பிளிக் இந்த யுத்தத்தை ஒரு சட்ட விரோத யுத்தம் என வருணித்தமை இங்கு குறிப்பிட தக்கது.
அமெரிக்க போர் விமானங்கள் ஈராக்கிய நகரங்கள் மீது சரமாரியான குண்டு வீச்சுகளை நிகழ்த்தின. ஒரு சில நாட்களுக்குள் பொது மக்கள் குடிநீர், மருத்துவ வசதிகள், மின்சாரம், உணவு மற்றும் உறைவிடம் எதுவுமற்ற அபலைகள் ஆனார்கள். பல நாட்களாக அமெரிக்காவின் அதி நவீன விமானங்கள் ஈராக்கிய நகரங்கள் மீது குண்டு மாரி பொழிந்து அவற்றை சுடுகாடுகளாக மாற்றின. உயிருக்கு போராடிய ஈராக்கிய சிறுவர்கள் மிக மோசமான உளவியல் தாக்கங்களுக்கு உள்ளானார்கள். மரண ஓலத்தை எதிர்நோக்கிய ஈராக்கிய மக்களுக்கு தாம் எதற்காக இவ்வாறான கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றோம் என்று புரியவில்லை.
இதன் பின்னர் மனித உள்ளத்தை உலுக்கும் அமெரிக்க படையினரின் ஈராக்கிய பெண்கள் மீதான குழு பாலியல் வன்புணர்வு (Gang Rape) புகைப்படங்கள் வெளியாகின. அப்பாவி ஈராக்கிய பெண்கள் பலாத்காரமாக வீடுகளில் இருந்து இழுத்து வரப்பட்டு கதறக் கதற அவர்களை பாதுகாக்க வந்த படையினரால் நாசமாக்கப்பட்டார்கள்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாகரிகமான அமெரிக்க படையினரால் கீழ்த்தரமான இந்த நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டது. இத்துன்பத்துக்கு ஆளான பெண்கள் ஒரு நாகரிகமான இஸ்லாமிய சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். தமது தூய்மையான பெண்மையை ஒரு சந்தோசமான மண வாழ்வுக்காக பொக்கிஷமாக பாதுகாத்து வந்தவர்கள். இக்கொடுமையை புரிந்த படை வீரர்கள் தமது பெண் உறவுகளுக்கு இவ்வாறான நிலை ஏற்படுவதை கற்பனை செய்து கூட பார்க்க பயப்படுவார்கள்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் எவ்வித குற்றச்சாட்டுகளோ சான்றுகளோ இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு மிகவும் காட்டுமிராண்டித்தனமான சித்திர வதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். உலகின் பல பாகங்களில் இருந்தும் இவற்றுக்கு கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்க படையினர் மிகவும் மூர்க்கமான விசாரணை முறைகளை கையாண்டனர்.
கைதிகளை நிர்வானமாக்குதல், அதீத வெப்பம், சப்தம், ஒளி மற்றும் குளிர் நிலைகளுக்கு உட்படுத்தல்இ நீண்ட காலத்துக்கு உறங்கவிடாமல் தடுப்பது போன்ற ஜெனீவா ஒப்பந்தத்துக்கு எதிரான முறைகளை பயன்படுத்தினர். கைதிகள் இச்சிதிரவதைகளினால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தனர். பல நூற்றுக்கணக்கான கைதிகள் இச்சிதிரவதைகளினால் கொல்லப்பட்டனர்.
இந்த சித்திரவதை நடவடிக்கைகள் வெளி உலகுக்கு தெரியா வண்ணம் இரகசியமான முறையில் மேட்கொள்ளப்பட்டன. எனினும் செய்மூர் ஹெர்ஷ் என்ற துப்பறியும் ஊடகவியலாளர் இரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சிகரமான புகைப்படங்களுடன் ஒரு கட்டுரைத்தொடரை வெளியிட்டதை தொடர்ந்து அபு காரிப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவ போலீசார் நடாத்திய வெறியாட்டங்கள் வெட்ட வெளிச்சமாகின.
அபு காரிப் சிறையில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் உலகை பேரதிர்ச்சியில் ஆக்கியது. கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு ஒரு குவியலாக குவிக்கப்பட்ட, மிகவும் கேவலமான பாலியல் நடவடிக்கைகளை செய்து காட்டும்படி கைதிகள் பணிக்கப்பட்ட மற்றும் நாய்களை கொண்டு முஸ்லிம் கைதிகளை தொந்தரவு செய்தமை போன்ற விடயங்கள் இந்த புகைப்படங்களில் அவதானிக்கப்படக்கூடியதாக இருந்தது.
ஈராக்கின் வளங்களை அழித்தல் அமெரிக்க படையினரின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இருந்தது. இவ்விலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டிருந்தது. விமான குண்டுவீச்சு தாக்குதல்கள் ஈராக்கின் உட்கட்டமைப்பை முற்றாக அளித்த அதே வேளை அந்நாட்டின் மூளை வளத்தை பல தலைமுறைகளுக்கு இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டன.
கல்விமான்கள் துறை சார்வல்லுனர்கள் அவர்களின் வீடுகளில் வைத்து இரவு வேளைகளில் கொல்லப்பட்டனர்.
2003 மே மாதமளவில் இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொசாத்’ இவ்வாறு கொள்ளப்பட வேண்டிய நபர்களின் பட்டியலுடன் ஈராக்கை வந்தடைந்தது. இப்பட்டியலில் பேராசிரியர்கள், அறிவியல் விற்பன்னர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் இன்னோரன்ன துறைசார் வல்லுனர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்களின் கொலைக்கு கூரிய ஆயுதங்களே பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களின் கழுத்துகள் அறுக்கப்பட்டே கொல்லப்பட்டனர். இக்கொலைகள் மனைவி, மகள் போன்ற பெண்ணுறவுகளின் முன்னிலையிலேயே நடைபெற்றன. பின்னர் இப்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பெரும்பாலான அறிக்கைகளின் பிரகாரம் 2000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் கொல்லப்பட்டதோடு 5500 க்கும் அதிகமான ஏனைய அறிவாளிகள் கொல்லப்பட்டனர்.
ஈராக்கிய பொதுமக்கள் தம்மை தாமே அழித்துக்கொள்ளும் வகையில் அமெரிக்க படையினர் ஷியா மற்று சுன்னி முஸ்லிம் பிரிவுகளுக்கு ஆயுதங்களை வழங்கி சண்டைகளை மூட்டி விட்டனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் ஊனமுற்றனர்.
அமெரிக்க படையினர் ஈராக்கின் தொல்நூதன சாலைகள் அனைத்தையும் கொள்ளையிட்டனர். 17000 க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன பொக்கிஷங்கள் கொள்ளையிடப்பட்டன.
அப்பாவி பொதுமக்களின் படுகொலைகளுக்கு மேலதிகமாக அமெரிக்க படைகளிடம் சரணடைந்த ஈராக்கிய படைவீரர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு கொல்லப்பட்ட படை வீரர்களின் எண்ணிக்கை இது வரை அறியப்படவில்லை.
காட்டு மிராண்டி படுகொலைகளின் தரவுகள் சேகரிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து பிறப்பு இறப்பு பதிவகங்கள் மற்றும் ஏனைய தகவல் சேகரிப்பு கட்டமைப்புகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டு தீக்கிரையக்கப்பட்டன. இவற்றில் காணிப்பதிவு, தொழில் நிறுவணங்கள் பதிவு, மற்றும் வாகன பதிவு அலுவலகங்கள் உள்ளடங்குகின்றன.
மூறு இலட்சம் சனத்தொகையை கொண்ட பலுஜா நகரில் அமெரிக்க படைகள் கொத்துக்குண்டுகள் என அறியப்படும் தடை செய்யப்பட்ட குண்டுகள் வான்வழியாக வீசப்பட்டன. அத்துடன் பயங்கரமான எரிகாயங்களை ஏற்படுத்த வல்ல பொஸ்பரஸ் குண்டுகள் இந்நகரின் மீது வீசப்பட்டன.
வியட்நாம் யுத்தத்தின் பின் பலுஜாவில் அமெரிக்க இந்த சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்டது. பத்து நாட்களுக்குள் செழிப்பான பலுஜா நகர் சுடுகாடாக்கப்பட்டது. இறந்த உடல்களும் சிதைக்கப்பட்ட உட்கட்டமைப்புக்களுமாக ஒரு பூலோக நரகமாக மாறிய அதேவேளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனித குலத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்ட ஒரு இடமாக வரலாற்றில் தன்னை பதிவு செய்து கொண்டது.
துருக்கிய பாராளுமன்ற மனித உரிமைகள் ஆணைக்குழு பலுஜா படுகொலைகள் பிர்அவுன், ஹிட்லர் மற்றும் முசோலினி போன்றவர்களால் மேட்கோள்ளப்பட்ட படுகொலைகளை விட கொடூரமானவை என்று வர்ணித்தது.
பலுஜா படுகொலைகளை நேரில் கண்ட ஒருவரின் சாட்சியங்களின் படி அமெரிக்க படைகள் பலுஜா நகரை ஆட்டிலறி, 2000 இறாத்தல் எடை கொண்ட விமான குண்டுகள் மற்றும் வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதோடு யுத்த தாங்கிகளை கொண்டு தரைவழி தாக்குதல்களையும் மேற்கொண்டன. இறந்த மனித உடலங்கள் வீதிகளெங்கும் அழுகிய நிலையில் காணப்பட்டு தெரு நாய்கள் மனித உடைல்களை புசித்த வண்ணமிருந்தன.
அமெரிக்க படைகள் வீதிகளில் கண்ட ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி சுட்டுகொன்றனர். காயமடைந்த பிள்ளைகள் மருத்துவ வசதிகள் இன்றி வீடுகளில் உயிரிழந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் தமது வீட்டு தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டனர். வீதிகளில் கிடந்த உறவுகளின் உடலங்களை எடுக்க முயன்ற உறவுகள் அதி நவீன அமெரிக்க துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு இரையாகின.
பிந்திய நாட்களில் வெளியான அறிக்கைகளின் பிரகாரம் அமெரிக்க படைகள் நேபாம் குண்டுகள் நச்சு புகைகள் போன்ற சட்டவிரோத ஆயுதங்களை பலுஜா பொதுமக்களை கொல்வதற்கு பயன்படுத்தின. நூற்றுக்கணக்கான உருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடலங்கள் அமெரிக்க படையினர் ஈராக்கில் நேபாம் வாயுக்குண்டுகளை பயன்படுத்தியதை உறுதிப்படுத்தின.
பலுஜா வாசிகள் இந்த தாக்குதல்கள் பற்றி விபரிக்கையில் ‘அவர்கள் ஆட்டிலறி, தாங்கிகள், நச்சுபுகைகள் மற்றும் மரபு ரீதியற்ற ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பலுஜாவை தரைமட்டமாக்க பயன்படுத்தினர்’ ‘அவர்கள் ஒரு வகையான குண்டுகளை பயன்படுத்தினர். இக்குண்டுகள் ஆகாயத்தில் காளான்கள் போல புகையை உருவாக்கம் பின்னர் இப்புகையில் இருந்தது சிறிய சிறிய துண்டுகள் நீண்ட புகை வாலுடன் பூமியில் விழுந்து வெடிக்கும். இதன் போது பயங்கர தீச்சுவாலைகள் தோன்றும். இத்தீச்சுவாலைகளினால் ஏற்படும் எரி காயங்கள் மீது தண்ணீர் படும் போது கூட பயங்கர வேதனை ஏற்படும்.’
பொஸ்பரஸ் மற்றும் நேபாம் வாயுக்குண்டகளே இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்த வல்லன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி இன்று ஒரு தகவல் (பக்கம்) இன் Post
0 கருத்துகள்:
கருத்துரையிடுக