அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!
சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!
-மால்கம் X (மாலிக் அல் ஷபாஸ்)
மால்கம் எக்ஸ் உலக புரட்சியாளர் வரலாற்றில் அழிக்கமுடியாத அத்தியாயம் ஆவார்.“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்” என்ற மால்கம் எக்ஸின் வாசகம் அனைத்து சமூக விடுதலை போராளிக்கும் பொருந்தும். இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க இஸ்லாமிய போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் May 19, 1925 பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிக்கு ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர்
மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது. மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள்.
‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம். ‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’. சமீபத்தில் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’. என்றார் இந்த மாவீரர்
மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.
மால்கம் எக்ஸ் கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக February 21, 1965 (aged 39) ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். தோமஸ் ஹாகன் என்பனால் பதினாறு குண்டுகள் பாய மேடையிலேயே அக்கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவர் கொல்லப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்
சுட்டு கொன்ற தோமஸ் ஹாகன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை .
மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மல்கம் தப்பியுமிருக்கின்றார். போராளி இருந்த மல்கமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் , காந்திக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.
மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.
“புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,
புரட்சி என்பது சமரசமற்றது,
புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி
போடுவது…”
அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.
மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,
பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,
அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,
தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது…..
மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் ஷஹீத்தாக்கபட்டாலும் இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும் சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்
நன்றி فاطمة بتول (Fatima Batool) இன் Facebook பதிவு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக