Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பேஸ்புக் டைம்லைனை மாற்றாமல் விட்டால் என்ன நடைபெறும் ?

நான் எவ்வாறு facebook timeline profile லை மாற்றுவது என்று தேடிக்கொண்டிருந்த வேலை ஒரு இணையதளத்தில் மாற்றுவது பற்றி பார்த்தேன் அதை கீழே மீள் பதிவு செய்துள்ளேன் வாசித்து விட்டு நீங்களும் மாற்றிக்கொள்ளுங்கள்



சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் டைம்லைன் என்ற புதிய வசதியை அனைவருக்கும் வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
எனினும் இதை பயன்படுத்தாமல் இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுக்காகவும் மற்றும் ஏற்கனவே டைம்லைனுக்கு மாறியோர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
ஆக்டிவேட் செய்வது எப்படி?
இதைச் செயற்படுத்துவது மிக இலகு முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்துகொள்ளுங்கள். பின்னர் https://www.facebook.com/about/timeline என்ற முகவரிக்குச் சென்று Get Timeline பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
7 நாட்கள் அவகாசம் ஏன்?
பேஸ்புக் டைம்லைனை ஆக்டிவேட் செய்ததும் Welcome to Your Timeline (7-Day Preview)
Only you can see your timeline during your 7-day preview. This gives you a chance to: 1. Review what's on your timeline now, and add or hide whatever you want என்ற தகவல் தோன்றும்.
டைம்லைனில் தேவையான மாற்றங்கள் மற்றும் பிரைவசி தொடர்பான விடயங்களை கவனமாக நீங்கள் சரி பார்த்துக்கொள்ளவே இந்த கால அவகாசம் தரப்படுகின்றது.
அனைத்தையும் சரி பார்த்து விட்டேன் எனது பேஸ்புக் புரோபைல் டைம்லைன் வசதிக்கு முழுதுமாக மாறி அனைவருக்கும் தெரியும் படி செய்யட்டும் என விரும்புபவர்கள் உடனேயே Publish Now ஐ அழுத்திவிடுங்கள். அல்லது
டைம்லைனில் உங்களின் தனிப்பட்ட விபரங்கள் தொடர்பான மாற்றங்களைச் செய்வது எப்படி?
உங்கள் புரோபைலில் தெரியும் குறிப்பிட்ட தகவல்களை டைம்லைனில் இருந்து நீக்க வேண்டுமாயின் அதற்கு மேலே தெரியும் பென்சில் அடையாளமிடப்பட்ட ஐகானை கிளிக் செய்து edit or Remove ஐ அழுத்துங்கள்.
அதில் தோன்றும் விண்டோவில் தெரியும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப டைம்லைனில் இருந்து நீக்க மற்றும் முழுதுமாக அழித்துவிட திகதியை மாற்றுவதற்கு போன்றவற்றை செய்ய முடியும்.
பேஸ்புக் டைம்லைனில் நீங்கள் விரும்பும் போஸ்ட்களை பெரிதாக காட்டுமாறு செய்வது எப்படி?
இதற்கெனவே இருக்கின்றது Feature ஐகான். விரும்பும் போஸ்ட்களை தெரிவு செய்து பென்சில் ஐகானுக்கு பக்கத்தில் தெரியும் Feature ஐகானை கிளிக் செய்யுங்கள்.
இவற்றைச் செய்த பின்னர் Publish Now என்பதை கிளிக் செய்துவிடுங்கள்.
டைம்லைனை மாற்றாமல் விட்டால் என்ன நடைபெறும்?
டைம்லைனை தொடமாட்டேன், ஆனால் பேஸ்புக்கில் வழமையான நடவடிக்கைகளை தொடருவேன் என்பவர்களுக்கும், இம்மாதம் 22ம் திகதியுடன் பேஸ்புக் புரோபைல் டைம்லைனுக்கு மாறித்தான் போகும்.
நன்றி புதிய விடியல் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஹிஜாப் தரும் சுதந்திரம்!



என்ன பார்க்கிறாய்?

என்னைப் பார்க்கும்போது

என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?

கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?

இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்

கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?

கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக

பிணைக்கப்பட்ட கைதியாக

நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்



எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்

வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் – கூண்டு கிளியா?

முடியை மறைத்தால் – அநாகரீகமா?

காட்ட மறுத்தால் – திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி

பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்

‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்

கோபமும், வேதனையும் எனக்கு

கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்

நீ என்னை ஒதுக்குவதாலும்

உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்

உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்

இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக

காட்சிப் பொருளாக

வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்

அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்

ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்

பொறுமையில் என் மென்மையும்

ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை

சரியான முடிவெடுக்கும் திறன்

சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்

உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்

குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்

கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்

கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை

அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை

ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை

கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை

விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’

அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’

அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்
ஹிஜாப் தரும் சுதந்திரம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

தூசானது நினைவுகள்

வயிற்றுச்சுமை இறங்குகிறது
சிசு அழுகிறது -
பெயர் வைப்பது யார்?

திரும்பிப் பார்க்கிறேன்
கத்தியால்குத்தியது
தந்தையாய் என்மகன்

சட்டென்று நகர்ந்தது கால்கள்
வியர்வையால் குழித்தது உடல்
பலாரென உதைத்து மனசு!


துடித்தது இதயம்
பலியானது நாமம்
கொதிக்கிறது உணர்வு!

தூசானது நினைவுகள்
விதியாய் மாறியது
தலை எழுத்துக்கள்!

மகன் தந்தையாகி விட
ம்…ம்…
உறவு சொல்ல _
பேரன் ஒருவர்
ரகசியமாய் பிறந்தது!

தூசானது நினைவுகள்


தொடர்புள்ள இடுக்கைகள் 
மரண தண்டனை
பெண்ணே புது அத்தியாயம் படை...
தூசானது நினைவுகள்
ஹிஜாப் தரும் சுதந்திரம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets